Bigg Boss Diamond Heist Task : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைரத்தை திருடிய டிடிஎஃப் வாசனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் உண்மை வெளிவருமா என்பதை பார்க்கலாம்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி 39-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஆறாவது வாரத்தில் போட்டி மேலும் விறுவிறுப்படைந்துள்ளது. வீட்டில் எஞ்சியுள்ள 18 போட்டியாளர்களுக்கும் ஒரே நேரத்தில் இரண்டு டாஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. டைமண்ட் ஹீய்ஸ்ட் மற்றும் டான்ஸ் மாரத்தான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். இதற்கிடையில், டைமண்ட் ஹீய்ஸ்ட் டாஸ்க்கில் நடந்துள்ள ஒரு சம்பவம் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வைரம் யாருக்கும் தெரியாமல் திருடப்பட்டுள்ளது. நேற்றைய எபிசோடில் டிடிஎஃப் வாசன் திட்டமிட்டபடி வைரத்தை எடுத்துப் பதுக்கி வைத்தார். அவர் வைரத்தை எடுத்தது அவினாஷ் மற்றும் தன்யாவுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அவினாஷ் அந்த விஷயத்தை அஸ்மிதாவிடம் சொல்லிவிட, விஷயம் வீடு முழுக்க பரவி, வைரம் எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் வீட்டையே சல்லடை போட்டு தேடியும் வைரம் கிடைக்கவில்லை.
34
வலைவீசி தேடிய போட்டியாளர்கள்
இரவு முழுக்க மற்ற போட்டியாளர்கள் வைரத்தை தேட, டிடிஎஃப் வாசன் மட்டும் ஹாயாக தூங்கிவிட்டார். அவர் வைரத்தை பாத்ரூமில் உள்ள ஏசி வெண்டினுள் தான் வைத்திருக்கிறார். அந்த இடத்தை பிருத்வி கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட போதிலும் அவரால் வைரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தச் சூழலில், இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், காணாமல் போன வைரத்தைக் கண்டுபிடிப்பதற்காக மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவினாஷ், ஜேசன் மற்றும் வினோத் பாபு ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், தன்யா, கரிஷ்மா மற்றும் டிடிஎஃப் வாசன் ஆகிய மூவரையும் விசாரணைக் குழு சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கவுள்ளது. உண்மையில் வைரத்தைத் திருடியது யார், அது எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிப்பதில் போட்டியாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். முதலில் தன்யாவிடம் தான் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. அவர் தனக்கு தெரியவே தெரியாது என ஒற்றைக் காலில் நிற்கிறார். ஜேசன், வினோத் பாபு ஆகியோர் பல கேள்விகள் கேட்டு மடக்கினாலும் தன்யா அதற்கெல்லாம் அசரவில்லை.
வைரத் திருட்டின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? விசாரணையில் யார் சிக்கப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பை இன்றைய புரோமோ ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன. அதுமட்டுமின்றி இந்த வார இறுதிவரை வைரத்தை யாரும் கண்டுபிடிக்காவிட்டால், டிடிஎஃப் வாசன் இந்த டாஸ்க்கில் வெற்றிபெற்றுவிடுவார். அதோடு அவருக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸும் வழங்கப்பட்டுவிடும்.