Bigg Boss Hosts Salary : பிக் பாஸ் தொகுப்பாளர்களில் யாருக்கு அதிக சம்பளம்? நம்ம விஜய் சேதுபதி எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

Published : Sep 07, 2026, 02:26 PM IST

Bigg Boss Host Salary : இந்தியாவில் பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்குது. இதை தொகுத்து வழங்குற ஸ்டார்ஸ் வாங்கும் சம்பள விவரம் சுவாரஸ்யமா இருக்கு. இந்த லிஸ்ட்ல யார் டாப்-ல இருக்காங்க என்பதை பார்க்கலாம்.

PREV
17
பிக் பாஸ்: அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர் யார்?

இந்தியாவின் நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம்னு பல மொழிகள்ல பட்டையக் கிளப்புது. போட்டியாளர்களை விட, இந்த ஷோவை தொகுத்து வழங்குற ஸ்டார்ஸ் எவ்வளவு சம்பளம் வாங்குறாங்கன்னு தெரிஞ்சுக்கதான் எல்லாருக்கும் ஆர்வம். தேசிய ஊடக அறிக்கைகளின்படி, சல்மான் கான் இந்த லிஸ்ட்ல முதலிடத்திலும், நம்ம விஜய் சேதுபதி, நாகார்ஜுனா அடுத்தடுத்த இடங்களிலும் இருக்காங்க.

Bigg Boss promo: ஜனநாயகத்தின் ஆட்டம்! பிக்பாஸ் முதல் கேப்டன் யார்? வெளியான புரோமோ!

27
சல்மான் கான் – இந்தி பிக் பாஸ்

இந்தி பிக் பாஸ்னா சல்மான் கான் தான். பல சீசன்களா அவர்தான் தொகுத்து வழங்குறார். வீக்கெண்ட் எபிசோட்ல அவர் பேசுற ஸ்டைலுக்காகவே ஷோ ஹிட்டாகுது. ஒரு சீசனுக்கு சுமார் 125 கோடி ரூபாய் சம்பளம் வாங்குறதா தகவல். அதாவது, ஒரு வீக்கெண்ட் எபிசோடுக்கு மட்டுமே 15 கோடி ரூபாய்க்கு மேல வாங்குறாராம்.

Bigg Boss Tamil 10: விஜய் சேதுபதியை கவர்ந்த ஜாலி பேச்சு... யார் இந்த முகேஷ்?

37
விஜய் சேதுபதி – தமிழ் பிக் பாஸ்

தமிழ் பிக் பாஸை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குறார். அவரோட இயல்பான பேச்சு ரசிகர்களை ரொம்பவே கவர்ந்திருக்கு. இந்த ஷோவுக்காக அவருக்கு 75 கோடியிலிருந்து 80 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படுவதா சொல்றாங்க. இதனால, தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிக் பாஸ் தொகுப்பாளர் இவர்தான்.

Bigg Boss Tamil 10 : விமர்சகர் பிரசாந்தை விட அதிக ஓட்டு வாங்கி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றவர் - யார் இந்த ஜாவித்?

47
நாகார்ஜுனா – தெலுங்கு பிக் பாஸ்
தெலுங்கு பிக் பாஸை 'கிங்' நாகார்ஜுனா தொடர்ந்து தொகுத்து வழங்கிட்டு வர்றார். போட்டியாளர்கள்கிட்ட ஜாலியா பேசி, தேவைப்பட்டா சீரியஸா கிளாஸ் எடுக்குற நாகார்ஜுனாவின் ஸ்டைலுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. ஒரு சீசனுக்கு இவர் 35 கோடியிலிருந்து 40 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குறதா ரிப்போர்ட்ஸ் சொல்லுது.
57
மோகன்லால் – மலையாளம் பிக் பாஸ்
மலையாள பிக் பாஸை சூப்பர் ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்குறார். அவரோட ஸ்டார் இமேஜ்தான் இந்த ஷோவோட முக்கிய ஈர்ப்பே. இந்த நிகழ்ச்சிக்காக மோகன்லாலுக்கு சுமார் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைப்பதாக தகவல்.
67
கிச்சா சுதீப் – கன்னட பிக் பாஸ்
கன்னட பிக் பாஸை ரொம்ப காலமா கிச்சா சுதீப் தான் தொகுத்து வழங்கிட்டு இருக்கார். கன்னட ரசிகர்கள் மத்தியில அவருக்கு இருக்குற பெரிய ஃபேன் பேஸ்தான் ஷோவோட வெற்றிக்கு முக்கிய காரணம்னு சொல்வாங்க. பிக் பாஸ் ஹோஸ்டிங்கிற்காக இவர் சுமார் 20 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குறதா ரிப்போர்ட்ஸ் சொல்லுது.
77
சவுரவ் கங்குலி – பெங்காலி பிக் பாஸ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் பெங்காலி பிக் பாஸ் மூலமா செய்திகளில் இடம்பிடிச்சார். அவரோட டீல் மதிப்பு ரொம்ப பெருசுன்னு சொல்றாங்க. நாலு வருஷ ஒப்பந்தத்துக்கு 125 கோடி ரூபாய் வரை டீல் பேசப்பட்டதா தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கு.
Read more Photos on
click me!

Recommended Stories