அவருடைய இயல்பான நகைச்சுவை உணர்வு வீட்டில் மற்ற போட்டியாளர்களுடன் நல்ல உறவை உருவாக்க உதவுமா? அல்லது போட்டி தீவிரமாகும் போது அவருடைய மற்றொரு முகம் வெளிப்படுமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குக் வித் கோமாளியில் சிரிக்க வைத்த அன்சர்... பிக் பாஸ் வீட்டில் எப்படி விளையாடப் போகிறார்? டாஸ்குகளில் தனது திறமையை நிரூபிப்பாரா, இல்லை நகைச்சுவை மற்றும் என்டர்டைன்மென்ட் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
குக் வித் கோமாளி டூ பிக்பாஸ்
எது எப்படியிருந்தாலும், அன்சரின் என்ட்ரி உறுதியானதால் பிக் பாஸ் தமிழ் சீசன் 10-க்கு இது நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான சேர்க்கையாக இருக்கும். இதற்கு முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து சுனிதா, ரம்யா பாண்டியன், கனி, சம்யுக்தா, பிரியங்கா தேஷ்பாண்டே, செளந்தர்யா, பவித்ரா ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். அவர்களில் சிலருக்கு இந்நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய புகழ் வெளிச்சம் கிடைத்தது. அதேபோல் அன்சருக்கும் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Bigg Boss Tamil 10 : புன்னகையோடு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முனியம்மாவின் வலிகள் நிறைந்த வாழ்க்கை பற்றி தெரியுமா?