Bigg Boss Contestant Chandini : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகை சாந்தினி தமிழரசன் களமிறங்கி உள்ளார். அவரைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகை சாந்தினி தமிழரசன் தற்போது நேராக பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டுக்குள் களமிறங்கி உள்ளார். சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, அடுத்தடுத்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த சாந்தினிக்கு, பிக் பாஸ் வீடு முற்றிலும் புதிய களமாக இருக்கப்போகிறது. இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் இயக்கிய ‘சித்து +2’ திரைப்படம் தான் சாந்தினி தமிழரசனின் சினிமா என்ட்ரி. சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
24
சினிமா பயணம்
அதன்பிறகு ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடர்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு திரையுலகிலும் தனது நடிப்பை பதிவு செய்தார். இப்படியாக பல வருடங்களாக சினிமா உலகில் பயணித்து வந்த சாந்தினி, இப்போது தனது கேரியரில் எதிர்பாராத ஒரு ரூட்டை தேர்வு செய்திருக்கிறார். அது... பிக் பாஸ்! சினிமா நடிகைக்கு கேமரா புதிதல்ல. ஆனால் பிக் பாஸ் வீட்டின் கேமரா அப்படியில்லை! அங்கே 24 மணி நேரமும் கேமரா கண்காணிப்பு. சின்ன ரியாக்ஷன் முதல் பெரிய முடிவு வரை அனைத்தும் ரசிகர்களின் பார்வைக்கு வரும்.
34
சாந்தினிக்கு காத்திருக்கும் சவால்
அதிலும் டாஸ்க், நாமினேஷன், நட்பு, கருத்து மோதல், ஈகோ கிளாஷ் என ஒவ்வொரு நாளும் ஆட்டம் வேறு லெவலுக்கு செல்லும். இதுவரை இயக்குநர் சொன்ன கதாபாத்திரத்தை நடித்த சாந்தினி... இனி தன்னுடைய கதையை தானே எழுத வேண்டியிருக்கும்! சைலண்ட் கேம் ஆடுவாரா? இல்ல... சம்பவம் செய்வாரா? என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். பிக் பாஸ் வீட்டுக்குள் சாந்தினியின் கேம் பிளான் என்னவாக இருக்கும் என்பதுதான் இப்போது ஹாட் டாபிக்.
மற்ற போட்டியாளர்களுடன் ஆரம்பத்திலேயே நட்பை உருவாக்குவாரா? டாஸ்க் என்று வந்தால் முழு எனர்ஜியுடன் களமிறங்குவாரா? கருத்து மோதல் ஏற்பட்டால் அமைதியாக கடந்து செல்வாரா? அல்லது... “நான் இப்படித்தான்!” என்று ஓப்பனாக தனது நிலைப்பாட்டை முன்வைப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சினிமாவில் ஒரு நடிகையை ரசிகர்கள் பெரும்பாலும் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் பிக் பாஸ் அப்படி இல்லை. இங்கே எந்த ஹீரோயின் இமேஜும் கிடையாது. எந்த ஸ்கிரிப்ட்டும் கிடையாது. எந்த ரீடேக்கும் கிடையாது.
மக்கள் பார்க்கப் போவது சாந்தினி தமிழரசனின் உண்மையான ஆளுமையை! இதுதான் இந்த பிக் பாஸ் என்ட்ரியை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. ‘சித்து +2’ படத்தில் ஹீரோயினாக தொடங்கிய பயணம்... இப்போது பிக் பாஸ் வீட்டின் போட்டியாளராக ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது! சினிமாவில் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த சாந்தினி... பிக் பாஸ் வீட்டில் தன்னையே கதாநாயகியாக்கி வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.