Bigg Boss Tamil 10 : புன்னகையோடு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முனியம்மாவின் வலிகள் நிறைந்த வாழ்க்கை பற்றி தெரியுமா?

Published : Sep 06, 2026, 10:15 PM IST

Bigg Boss Contestant Muniyamma : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் ஆக எண்ட்ரி கொடுத்துள்ள முனியம்மாவின் வாழ்க்கை பின்னணி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
13
யார் இந்த முனியம்மா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கி உள்ள நிலையில் அதில் கலந்துகொள்ள காமன்மேன் ஆடிஷனில் இருந்து மூன்று பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் முனியம்மா. மதுரையைச் சேர்ந்த முனியம்மா பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இயல்பான மதுரை வட்டார பேச்சு, வெளிப்படையான அணுகுமுறை மற்றும் அன்றாட வாழ்க்கையை நகைச்சுவையுடன் பகிரும் விதம் ஆகியவை அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

பிரமாண்டமான கேமரா செட்டப் அல்லது செயற்கையான பின்னணி என எதையும் நம்பாமல், தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களையே எளிமையாக பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றவர் முனியம்மா. அவரது பேச்சில் இருக்கும் இயல்பும், வெள்ளந்தியான குணமும் பலரையும் கவர்ந்துள்ளது.

23
போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை

முனியம்மாவின் பின்னணியும் தற்போது பேசுபொருளாகியுள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதிலேயே அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டதாகவும், அங்கு பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. வாழ்க்கையில் பல தடைகளை சந்தித்தபோதிலும், தனது சொந்த முயற்சி மற்றும் உழைப்பின் மூலம் சமூக வலைத்தளங்களில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி, தற்போது பிக் பாஸ் ஆடிஷன் மேடை வரை வந்திருப்பது அவரது பயணத்தின் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

முந்தைய சீசன்களில் சாதாரண பின்னணியில் இருந்து வந்த போட்டியாளர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில், முனியம்மாவைப் போன்ற இயல்பான குணம் கொண்ட போட்டியாளர் பிக் பாஸ் தமிழ் 10-க்கு ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக அமையலாம்.

33
முனியம்மாவின் குடும்ப பின்னணி

முனியம்மாவுக்கு திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார். முனியம்மாவுக்கு எழுதக் கூட தெரியாதாம். அவர் பிக் பாஸில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவரது மகன் தான் அப்ளை செய்தாராம். முனியம்மாவின் மகன் பெயர் இஷாந்த் சர்மா. இந்த பெயருக்கு பின்னணியிலும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. முனியம்மாவின் கணவருக்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா ரொம்ப பிடிக்குமாம். அதனால் அவர் பெயரையே தன்னுடைய மகனுக்கு வைத்துவிட்டாராம்.

முனியம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன் அவருடைய கணவர் அவருக்காக மதுரையில் இருந்து ஆசை ஆசையாக வாங்கி வந்த மல்லிப்பூவை மேடையில் வந்து வைத்துவிட்டார். தன் கணவர் தன்னை புகழ்ந்து பேசியதை கேட்டதும் மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுதார் முனியம்மா.

Bigg Boss Tamil 10 : பாக்யராஜ் அறிமுகப்படுத்திய ஹீரோயின் இப்போ பிக் பாஸ் வீட்டில்... யார் இந்த சாந்தினி தமிழரசன்?

Read more Photos on
click me!

Recommended Stories