பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது வார இறுதியை முன்னிட்டு, போட்டியாளர்களுக்கு 'என் அன்பிற்கினிய' என்ற உணர்ச்சிகரமான டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில், தங்களுக்குப் பிடித்தமான நபர்கள், வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் மீதான அன்பு மற்றும் தங்களுடைய குடும்பத்தினரைப் பிரிந்திருப்பதால் ஏற்படும் ஏக்கம் போன்ற உணர்வுகளை ஒரு அட்டையில் எழுதி, அனைவருக்கும் முன்னால் வாசிக்க வேண்டும்.
வழக்கமாகப் போட்டி, சண்டை, வாக்குவாதம் எனத் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வந்த போட்டியாளர்கள், இந்த டாஸ்க்கில் மனதில் இருக்கும் அன்பையும் குடும்பத்தின் மீதான பாசத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளனர். தங்களுடைய அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்து அவர்கள் பேசியபோது, வீட்டில் உணர்ச்சிகரமான சூழல் உருவானது.
போட்டியாளர்கள் தங்களுடைய மனதில் இருந்த ஏக்கங்களைப் பகிர்ந்துகொண்டதைத் தொடர்ந்து, பலரும் கண்கலங்கியதாகப் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது. வீட்டிற்குள் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டாலும், ஒவ்வொருவருக்கும் வெளியில் ஒரு குடும்பமும், பிரிவின் வலியும் இருப்பதை இந்த டாஸ்க் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.