Vinayagar Chaturthi 2025: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு! தொழிலில் அமோக லாபம் வரும்

Published : Aug 26, 2025, 01:43 PM IST

விநாயகர் சதுர்த்தி நாளில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். விநாயகப் பெருமானின் ஆசிர்வாதத்தை பெறப்போகும் அந்த ராசிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

PREV
16
Vinayagar Chaturthi 2025

விநாயகர் சதுர்த்தி நாளை (ஆக.27) புதன்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அந்நாளில் விநாயகர் பெருமானை முழு மனதுடன் வழிபடும் பக்தர்களுக்கு செல்வம் செழிப்பு கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனாலும் இந்த ராசிக்காரர்களுக்கு விநாயகர் பெருமானின் ஆசிர்வாதம் கூடுதலாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த ராசிகள் என்னென்ன என்பதை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

26
மேஷம்

மேஷ ராசி விநாயகப் பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான ராசிகளில் ஒன்றாகும். செவ்வாய் பகவானால் ஆளப்படும் இந்த ராசியானது ரொம்பவே தைரியமாகவும், அச்சமின்றியும் இருப்பார்கள். விநாயகர் சதுர்த்திக்கு பிறகு இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடும். அதாவது இவர்கள் நினைத்த காரியம் கைகூடும். நினைக்கும் வேலைகள் விரைவாக நடைபெறும். பணத்திற்கு பஞ்சமே வராது. செய்யும் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.

36
மிதுனம்

இந்த ராசி புதன் கிரகத்திற்கு உகந்த ராசியாகும். விநாயக பெருமானின் அருள் இந்த ராசிகளின் மீது நிறைந்திருக்கும். இந்த ராசிக்காரர்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். முக்கியமாக இவர்கள் செய்யும் தொழிலில் எதிர்பாராத லாபம் அதிகரிக்கும். மேலும் சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

46
விருச்சிகம்

விருச்சிகம் செவ்வாய் பகவனுக்கு உரிய ராசியாகும். இந்த ராசிக்காரர்கள் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்களாம். விநாயகப் பெருமானின் அருள் இவர்கள் மீது இருப்பதால் இவர்கள் எப்போதெல்லாம் பிரச்சனைகள் சிக்குகிறார்களோ அப்போதெல்லாம் விநாயகப் பெருமான் இவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பாராம். விருச்சக ராசிக்காரர்கள் விநாயகருக்கு பிடித்த லட்டுவை படைத்து விநாயகரை முழு மனதுடன் வழிபட்டால் நிறுத்த காரியம் நடக்கும். முக்கியமாக அன்னாளில் வேலை மக்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது.

56
மகரம்

சனிபகவானுக்கு உகந்த ராசி இதுவாகும். சனி பகவான் மற்றும் விநாயகரின் அருள் இந்த ராசிகள் மீது எப்போதுமே இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை வரும் போதெல்லாம் விநாயகரின் அருளால் பாதுகாக்கப்படுவார்கள். மேலும் இவர்களுக்கு விநாயகர் செல்வம், புகழ், செழிப்பு ஆகியவற்றை கொடுப்பார். இவர்கள் இணைத்த காரியம் எல்லாம் நடக்கும்.

66
கும்பம்

கும்பம் சனி பகவானுக்கு உகந்த ராசியாகும். எனவே சனி மற்றும் விநாயகரின் அருள் இவர்கள் மீது இருக்கும். இதனால் செல்வம் வெற்றி அனைத்தும் இவர்களை தேடி வரும். இளம் வயதிலேயே இவர்கள் நல்ல வேலையில் இருப்பார்கள். இவர்களால் இவர்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் இவர்கள் செய்யும் தொழிலில் கொடி கட்டி பறப்பார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories