Astrology: விநாயகர் சதுர்த்தியன்று சுக்கிரன் உருவாக்கும் சக்தி வாய்ந்த யோகம்! 3 ராசிகள் காட்டில் பணமழை தான்!

Published : Aug 26, 2025, 11:00 AM IST

விநாயகர் சதுர்த்தி அன்று சுக்கிர பகவான் நவபஞ்ச யோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக மூன்று ராசிகள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
சுக்கிரன் உருவாக்கும் நவபஞ்ச யோகம்

ஜோதிட சாஸ்திரத்தின் படி அசுரர்களின் குருவான சுக்கிரன் செல்வம், காதல், ஆடம்பரம் ஆகியவற்றிற்கு காரகராக விளங்குகிறார். இவர் 26 நாட்களுக்கு ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுகிறார். இதன் விளைவாக 12 ராசிகளின் வாழ்க்கையில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். தற்போது சுக்கிரன் கடக ராசியில் புதனுடன் இணைந்து லட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறார். அதே சமயம் ஆகஸ்ட் மாத இறுதியில் நெப்டியூனுடன் இணைந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்க உள்ளார். ஆகஸ்ட் 27 ஆம் தேதி அதிகாலை 3:46 மணிக்கு சுக்கிரன் நெப்டியூன் (வருணன்) ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருப்பார்கள். இதன் காரணமாக நவபஞ்ச ராஜயோகம் உருவாகிறது.

25
120 டிகிரியில் சந்திக்கும் வருணன் - சுக்கிரன்

நெப்டியூன் வேத ஜோதிடத்தில் வருணன் என அழைக்கப்படுகிறார். இவ்வாறு ஒரு ராசியில் சுமார் 14 ஆண்டுகள் தங்குவார். அவர் மீண்டும் அதே ராசிக்கு வர 165 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில் தற்போது வருணனும் சுக்கிரனும் 120 டிகிரியில் சந்தித்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இந்த ராஜயோகம் காரணமாக சில ராசிகளை சேர்ந்தவர்கள் நல்ல பலன்களைப் பெற உள்ளனர். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையுள்ளது. சிலருக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். நவபஞ்சம ராஜயோகத்தால் பலனடைய உள்ள மூன்று ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

35
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகம் மிகுந்த நன்மைகளை தரவுள்ளது. இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சாதகமான பலன்களைப் பெற உள்ளனர். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். நிதி நிலைமை மேம்படும் நிலம் மற்றும் சொத்துக்களில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்ந்து பணம் கைக்கு வந்து சேரலாம். உறவினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த காலம் பல நன்மைகளை வழங்கும். மூத்த அதிகாரிகளுடன் நல்ல உறவு ஏற்படும். சக ஊழியர்களுடன் மரியாதை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய வாழ்க்கையில் நிறைய வளர்ச்சிகள் ஏற்படலாம். உடல் நல ஆரோக்கியம் மேம்படும்.

45
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் மகத்தான வெற்றியை பெறுவார்கள். இவர்கள் பல்வேறு வழிகளில் பண நன்மைகளைப் பெறலாம். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கும். எதிர்காலத்திற்காக பணத்தை சேமிப்பதில் நீங்கள் வெற்றி பெறலாம். இந்த காலம் மாணவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் நல்ல பலன்களை பெறலாம். திருமணமத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரலாம். வணிகத்திலும் நேர்மையான விளைவுகளை எதிர்பார்க்கலாம். தொழில் செய்து வருபவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.

55
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகம் அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளது. இந்த ராசிக்காரர்கள் பல துறைகளிலும் மகத்தான வெற்றியை பெறலாம். குறிப்பாக கலை மற்றும் இலக்கியத் துறையில் இருப்பவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். இது உங்கள் வாழ்க்கையில் நிறைய நன்மைகளைத் தரும். மாணவர்களுக்கு இந்த காலம் அதிர்ஷ்டமானதாக அமையும். உங்கள் பாடத்தில் கவனம் செலுத்தி படித்தால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெற முடியும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: மேற்கூறப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் பொதுவான அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்கள் அடிப்படையில் பெறப்பட்டவை மட்டுமே. ஒவ்வொருவரின் ஜாதகம், கிரக நிலைகள், தசா புத்திகள் ஆகியவற்றைப் பொறுத்து பலன்கள் வேறுபடும் என்பதால் தகுதி வாய்ந்த ஜோதிடரை அணுகி ஆலோசனை மேற்கொள்வது நல்லது)

Read more Photos on
click me!

Recommended Stories