ஜோதிடத்தின் படி 12 ராசிகளும் ஏதாவது ஒரு தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் விநாயகருக்கு விருப்பமான 4 ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்து மதத்தில் விநாயகர் முக்கிய தெய்வமாக வழிபடப்படுகிறார். எந்த ஒரு முக்கிய பணியையும் தொடங்குவதற்கு முன்னர் அவரை வணங்குவது வழக்கம். அவர் அருளால் தடைகள் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றமும் செழிப்பும் கிடைக்கும். ஜோதிடத்தின் படி குறிப்பிட்ட ராசிகளை சேர்ந்தவர்களுக்கு விநாயகரின் ஆசீர்வாதம் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு விநாயகரின் ஆசியால் செல்வத்திற்கு ஒருபோதும் குறைவு ஏற்படுவதில்லை. அவர்கள் எந்த துறையை எடுத்தாலும் வெற்றி அடைகிறார்கள். அந்த ராசிகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
25
மேஷம்
மேஷ ராசியின் அதிபதியாக செவ்வாய் இருக்கிறார். இவ்வாறு கிரகங்களின் தளபதியாவார். இந்த ராசிக்காரர்களுக்கு விநாயகரின் ஆசி எப்போதும் உண்டு. இவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனை நிச்சயமாக பெறுவார்கள். இவர்களுக்கு எப்போதும் பணக்குறை ஏற்படாது. வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்கும். தொழில் வணிகம் என அனைத்திலும் நிறைய லாபம் கிடைக்கும். இவர்களுக்கு விநாயகரின் பரிபூரண ஆசி இருப்பதால் உடல் நலக்குறைவு ஏற்படாது.
35
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருகிறார். இவர் ஞானம் மற்றும் விவேகத்தின் கடவுளாக இருப்பதால் விநாயகர் இந்த கிரகத்தின் அதிபதியாக கருதப்படுகிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு விநாயகனின் ஆசி முழுமையாக உண்டு. இவர்கள் முன்னேற்றத்தையும், செல்வத்தையும் எளிதில் அடைவார்கள். இவர்களுக்கு உண்டாகும் எந்த ஒரு நெருக்கடியையும் நீக்கி விநாயகர் அவர்களுக்கு அருள் புரிகிறார்.
கன்னி ராசியின் அதிபதியாகவும் புதன் பகவான் விளங்கி வருகிறார். இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கும் விநாயகரின் ஆசி எப்போதும் உண்டு. விநாயகர் இவர்களை ஒருபோதும் நிதி நெருக்கடியை சந்திக்க விடமாட்டார். வாழ்வில் எந்த ஒரு பிரச்சனை ஆனாலும் அது சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும். இவர்களின் நிதிநிலைமை நன்றாக இருக்கும். விநாயகரின் ஆசி இருப்பதால் கல்வித்துறையிலும், தொழில்துறையிலும் கன்னி ராசிக்காரர்கள் சிறந்து விளங்குவார்கள்.
55
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கும் விநாயகரின் அருள் பரிபூரணமாக உண்டு. இந்த ராசிக்காரர்களின் அதிபதியாகவும் செவ்வாய் விளங்கி வருகிறார். எனவே விருச்சக ராசிக்காரர்களும் விநாயகருக்கு பிடித்தவர்களாக இருக்கின்றனர். விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பிலேயே ஆக்ரோஷமானவர்கள். இவர்களுக்கு விநாயகர் கோபத்தை கட்டுப்படுத்த உதவுகிறார். இவர்கள் செய்யும் வேலைகளில் ஏதேனும் தடங்கல்கள் வந்தாலும் அதை விநாயகர் நிவர்த்தி செய்து அந்த வேலையை முடிக்க உதவுகிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கும் விநாயகரின் ஆசிகள் பரிபூரணமாக உண்டு.