
ஜோதிடத்தின் படி ஒருவரின் பிறந்த மாதமானது அவர்களின் ஆளுமை, முடிவெடுக்கும் திறன் மற்றும் சமூக தொடர்புகளை பாதிக்கலாம். சில மாதங்களில் பிறந்தவர்கள் சூழ்நிலைகளை தங்கள் புத்திசாலித்தனத்தால் எளிதாக கையாளவும், மற்றவர்களை விட ஒரு படி முன்னே இருக்கவும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் அல்லது சூழ்ச்சி செய்பவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை தந்திரமாக பயன்படுத்தி தங்களுக்கு தேவையானவற்றை சாதித்துக் கொள்வார்கள். எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் தந்திரமானவர்கள் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே புத்திசாலித்தனமும், மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறனும் கொண்டவர்கள். இவர்கள் புதுமையான சிந்தனையாளர்கள், எந்த ஒரு சிக்கலான சூழ்நிலையையும் வித்தியாசமான கோணத்தில் அணுகி தீர்வு காண்பதில் வல்லவர்கள். இவர்களின் மனத் தெளிவு மற்றும் உள்ளுணர்வு மற்றவர்கள் கவனிக்காத விஷயங்களை இவர்கள் கவனிக்க உதவுகிறது. மேலும் இவர்கள் உணர்ச்சி நுண்ணறிவு மூலம் மற்றவர்களின் மனதை எளிதாக புரிந்து கொள்கின்றனர். இவர்கள் தங்கள் பேச்சுத் திறனால் மற்றவர்களை எளிதில் கவர்ந்து தங்கள் வழிக்கு கொண்டு வருவதில் வல்லவர்களாக விளங்குகின்றனர். சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதிலும், நடத்தையை மாற்றிக் கொள்வதிலும் கில்லாடிகளாக விளங்குகின்றனர்.
மே மாதத்தில் பிறந்தவர்கள் பன்முகத் திறமையாளர்கள் மற்றும் இரட்டை ஆளுமை கொண்டவர்கள். அவர்களின் இந்த குணாதிசயங்கள் காரணமாக அவர்களை எளிதில் கணிக்க முடியாது. இந்த குணங்கள் அவர்களை தந்திரவாதிகளாக மாற்றுகிறது. அவர்கள் பேசியே காரியம் சாதிப்பதில் கில்லாடிகளாக விளங்குகின்றனர். அவர்கள் பிறரை மூளைச்சலவை செய்வதில் வல்லவர்கள். மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பார்கள். இதனால் அவர்கள் பொய் மற்றும் சூழ்ச்சியை மற்றவர்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. தங்களுடைய பேச்சுத் திறனாலும், விரைவான சிந்தனையாலும் மற்றவர்களை எளிதில் ஈர்க்கக்கூடிய குணம் கொண்டவர்கள். தங்கள் இலக்குகளை அடைய தந்திரமான உத்திகளை பயன்படுத்துவார்கள்.
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ராஜதந்திரம் நிறைந்தவர்களாகவும், வசீகரம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் தங்கள் வசீகரத்தால் அனைவரையும் எளிதில் வெல்லக் கூடியவர்கள். தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பிறரை பயன்படுத்துவதில் கில்லாடிகள். பிறரை இவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் பொழுது அதை அவர்களே அறியாத வண்ணம் செய்து கொள்ளும் அளவிற்கு ராஜதந்திரம் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களின் மனதை எளிதில் புரிந்து கொண்டு தங்கள் முடிவுகளை மறைமுகமாக திணிப்பதில் வல்லவர்கள். பிறரின் உணர்ச்சி மற்றும் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கலையை கற்றுள்ளனர். தங்கள் புத்திசாலித்தனத்தை மறைமுகமாக பயன்படுத்தி எந்த ஒரு சூழ்நிலையையும் தங்கள் வழிக்கு கொண்டு வருவார்கள்.
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த தந்திர மனப்பான்மை கொண்டவர்கள். இவர்கள் மர்மம் மற்றும் ரகசியங்கள் நிறைந்தவர்கள். இவர்களை பிறர் புரிந்து கொள்வதே கடினமாகும். தங்கள் உண்மையான நோக்கங்களையும், உணர்வுகளையும் மறைப்பதில் கில்லாடிகள். பிறரின் உள்ளுணர்வு மற்றும் எண்ணங்களை எளிதில் படித்து விடும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்கள் தங்களின் தந்திரமான செயல்கள் மூலம் பிறரை பொம்மை போல் ஆட்டி வைத்து தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வார்கள். தங்களது கவர்ச்சியான ஆளுமை மற்றும் பேச்சுத் திறன் மூலம் பிறரை எளிதில் கவர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இவர்களின் தன்னம்பிக்கை மற்றவர்களை அவர்கள் பக்கம் இழுக்க உதவுகிறது. மேலும் சூழ்நிலைகளை திறமையாக கையாண்டு சிக்கல்களை ஆழமாக ஆராய்ந்து தந்திரமான முடிவுகளை எடுப்பதில் வல்லவர்கள்.
(பொறுப்பு துறப்பு: மேற்கூறிய மாதங்களில் பிறந்தவர்கள் இயல்பிலேயே புத்திசாலித்தனமும், சூழ்நிலைகளை திறமையாக கையாளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. இவர்கள் தங்கள் பேச்சுத்திறன், பகுப்பாய்வு, மனப்பான்மை மற்றும் உள்ளுணர்வு மூலம் மற்றவர்களை எளிதில் கவர்ந்து இலக்குகளை அடைகின்றனர். இதன் காரணமாகவே இவர்கள் தந்திரமானவர்கள் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த குணங்கள் ஒருவரின் தனிப்பட்ட அனுபவங்கள், வளர்ப்பு முறை, கலாச்சார பின்னணி ஆகியவற்றை பொறுத்து மாறுபடலாம். ஒருவரின் ஆளுமையை புரிந்து கொள்ள அவர்களின் தனிப்பட்ட குணங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கருத்துக்கள் ஜோதிட அடிப்படையிலானவை மட்டுமே. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)