Mangal Aditya Yog 2026: குரு பகவான் வீட்டில் நிகழும் அபூர்வ கிரக சேர்க்கை.! வாழ்க்கையில் அதிரடி திருப்பங்களை சந்திக்கப்போகும் ராசிகள்!

Published : Jan 05, 2026, 02:56 PM IST

Mangal Aditya Yog 2026 Lucky Zodiac Signs: ஜனவரி 9 ஆம் தேதி சூரியன் மற்றும் செவ்வாய் இருவரும் இணைந்து மங்களாதித்ய யோகத்தை உருவாக்க இருக்கின்றனர். இதன் காரணமாக சில ராசிகள் நன்மைகளைப் பெற உள்ளனர். அது குறித்து இங்கு பார்க்கலாம். 

PREV
15
மங்களாதித்ய யோகம் 2026

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 9 ஆம் தேதியன்று தனுசு ராசியில் செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய இரு கிரகங்களும் இணைந்து மங்களாதித்ய யோகத்தை உருவாக்குகின்றனர். சூரியன் அதிகாரம், தந்தை, கௌரவம், ஆன்மாவை குறிப்பவராகவும் செவ்வாய் வீரம், நிலம், சகோதர உறவு, நிர்வாகத்தை குறிப்பவராகவும் இருக்கிறார்.

இந்த இரண்டு நெருப்பு கிரகங்களும் இணைவது ஒருவருக்கு அபாரமான வீரத்தையம், நிர்வாகத் திறனையும், எதையும் சாதிக்கும் துணிச்சலையும் வழங்குகிறது. 2026 ஜனவரியில் இந்த சேர்க்கை தனுசு ராசியில் நடப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. இந்த மங்களாதித்ய யோகத்தால் சில ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இங்கு காணலாம்.

25
மேஷம்

மேஷ ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். மேலும் இந்த யோகம் மேஷ ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் நடைபெற இருக்கிறது. பாக்கிய ஸ்தானம் என்பது அதிர்ஷ்டம், தந்தை ஆகியவற்றை குறிக்கும் வீடாகும். எனவே இந்த காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் தீர்க்கப்பட்டு சொத்துக்கள் வாரிசுகளுக்கு வந்தடையும். வெளிநாடு பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

35
சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். மேலும் செவ்வாய் சூரியன் சேர்க்கை உருவாக்கும் ஆதித்ய மங்கள யோகம் சிம்ம ராசியின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நடைபெறுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை சேரும். பிள்ளைகளில் கல்வி அல்லது பிற முயற்சிகள் மூலம் உங்களுக்கு பெருமையை தேடி தருவார்கள். தடைபட்டு நின்ற திருமண காரியங்கள் கைகூடும். சொத்து சேர்க்கை நடக்கும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் அமோக வெற்றி பெறுவார்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும்.

45
விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு செவ்வாய் பகவான் அதிபதியாக விளங்கி வருகிறார். இந்த யோகம் உங்கள் ராசிகள் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் நிகழ்கிறது. இதன் காரணமாக இதுவரை சந்தித்து வந்த நிதி பிரச்சனைகள் தீரும். பொருளாதார நிலை மளமளவென உயரும். பேச்சாற்றலால் காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி பெருகும்ழ நிலம் தொடர்பான முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே செய்த பழைய முதலீடுகள் மூலம் திருப்திகரமான பண வரவு ஏற்படும். எதிர்பாராத பண வரவு அல்லது நிதி ஆதாயங்கள் உருவாகும். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும்.

55
தனுசு

தனுசு ராசியிலேயே இந்த கிரகச் சேர்க்கை நடைபெறுவதால் ஜனவரி 9 முதல் அதிக ஆற்றலுடன் செயல்படுவீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தலைமைப் பண்புகள் வெளிப்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் நிறைவேறாமல் இருந்த ஆசைகள் நிறைவேறும். அரசு மற்றும் பாதுகாப்பு துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீடு, நிலம் வாங்குபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். எலும்பு, ரத்தம் தொடர்பான உபாதைகள் இருப்பவர்கள் குறிப்பிட்ட முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories