10 நாட்களில் சுக்கிரன் நிகழ்த்தப்போகும் அதிசயம்.! கஷ்டங்கள் தீரும் காலம் வந்தாச்சு.! 5 ராசிகளுக்கு மாறப்போகும் தலைவிதி.!

Published : Jan 05, 2026, 11:41 AM IST

Venus Transit in Capricorn 2026: இன்னும் சில தினங்களில் சுக்கிர பகவான் தனுசு ராசிகளில் இருந்து வெளியேறி, மகர ராசிக்கு செல்ல இருக்கிறார். அவரின் பெயர்ச்சியால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
16
சுக்கிர பெயர்ச்சி 2026

சுக்கிர பகவான் தற்போது தனுசு ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். ஜனவரி 13 ஆம் தேதி அவர் மகர ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். சுக்கிரன் மகர ராசிக்கு பெயர்ச்சியாவது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சனி பகவானின் சொந்த ராசியான மகரத்தில் சுக்கிரன் குடியேறும்போது மனிதர்களின் நிதி நிலைமை, காதல், குடும்ப உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் பெயர்ச்சியால் பலனடைய உள்ள ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
மேஷம்

மேஷ ராசிக்கு சுக்கிர பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக வேலையில் இருந்த தடைகள் நீங்கும். பணியிடத்தில் இருந்த மன அழுத்தம் நீங்கி, புதிய தெளிவு பிறக்கும். மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும். குறைந்த ஊதியத்தில் அதிருப்தியில் வேலை பார்த்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். நிலுவையில் இருந்த பணப்பலன்கள் கைக்கு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

36
ரிஷபம்

ரிஷப ராசியின் ராசிநாதனாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். மேலும் இந்த பெயர்ச்சியின்போது சுக்கிரன் ரிஷப ராசிக்கு 9 ஆவது இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். இது பெரும் யோகத்தை தர இருக்கிறது. தடைபட்டு நின்ற சுப காரியங்கள் மீண்டும் வேகமெடுக்கும். தந்தையிடமிருந்து எதிர்பார்த்த சொத்துக்கள் அல்லது உதவிகள் கிடைக்கும். ஆன்மீகப் பயணங்கள் அல்லது வெளிநாட்டு பயணங்களுக்கான வாய்ப்புகள் வருவாகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கலாம். வீட்டில் திருமணம் வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும்.

46
கன்னி

கன்னி ராசியின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சுக்கிர பகவான் பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு காதல் கைகூடும். காதல் கனிந்து திருமணத்தை நோக்கி நகரும். வேலை பார்த்து வருபவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், புகழும் தேடி வரும். திருமண வாழ்க்கையில் அன்பும், நல்லிணக்கமும் நிலவும். தொழிலில் லாபம் உண்டாகும். இழுபறியில் இருந்த வேலைகள் முடிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

56
விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்திற்கு சுக்கிர பகவான் பெயர்ச்சி ஆகிறார். எனவே இந்த காலகட்டத்தில் உங்கள் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். எழுத்து, ஊடகம், தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு சமூகமான காலமாகும். தொழிலுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பெரிய லாபத்தை தரும். குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் திறக்கப்படும். திடீர் நிதி ஆதாயங்களை எதிர்பார்க்கலாம்.

66
மகரம்

சுக்கிர பகவான் மகர ராசியின் லக்ன ஸ்தானமான முதல் வீட்டில் அமர்வதால் இந்த காலகட்டத்தில் உங்கள் ஆளுமை அதிகரிக்கும். உங்கள் வசீகரம் கூடும். வீட்டில் பொன், பொருள், நகை, ஆபரணங்கள் சேரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தந்தை அல்லது தாய் வழியில் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். மன ரீதியாக மிகவும் உற்சாகமாக உணர்வீர்கள். நிலம், மனை, வீடு போன்ற அசையா சொத்துக்களில் முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories