Astrology: பொங்கலுக்குப் பிறகு இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம்.! வேலை, தொழில் மற்றும் காதலில் ஜொலிக்கப்போறீங்க.!

Published : Jan 05, 2026, 01:39 PM IST

Shukra Peyarchi 2026 Palangal: பொங்கலுக்குப் பிறகு சுக்கிரன் தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். இந்த சுக்கிர நட்சத்திர மாற்றம் ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரப் போகிறது. 

PREV
16
சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி 2026

ஜோதிடப்படி, சுக்கிரன் மகிழ்ச்சி, புகழ், அன்பின் காரகராக விளங்கி வருகிறார். ஜனவரி 31 அன்று, சுக்கிரன் அவிட்டம் நட்சத்திரத்தில் நுழைகிறார். இதனால் 5 ராசிகளின் வாழ்க்கை அற்புதமாக மாற இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

26
மேஷம்

சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் மேஷ ராசிக்கு சிறந்த நிதிப் பலன்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இழந்த பணத்தை திரும்பப் பெறுவீர்கள். புதிய திட்டங்களால் மரியாதை கூடும்.

36
ரிஷபம்

ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன். எனவே, இந்த நட்சத்திர மாற்றம் ரிஷப ராசியினருக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகும்.

46
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு, சுக்கிரன் பெயர்ச்சி வியாபாரத்தை விரிவுபடுத்த சாதகமாக இருக்கும். சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

56
கன்னி

சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் கன்னி ராசிக்கு சாதகமாக இருக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக மாறும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் வர வாய்ப்புள்ளது. புகழ், கௌரவம் அதிகரிக்கும்.

66
கும்பம்

அவிட்டம் நட்சத்திரத்தின் ஒரு பகுதி கும்ப ராசியில் உள்ளது. எனவே, சுக்கிரனின் இந்த பெயர்ச்சி கும்ப ராசிக்கு வரப்பிரசாதமாக அமையும். வருமானத்தை பெருக்க புதிய வழிகள் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories