
எண் கணிதம் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் கிளை. இது நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எண் கணிதத்தின் படி ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது குணாதிசயங்கள், எதிர்கால வாழ்க்கை, பலம், பலவீனம் இது போன்ற பல விஷயங்களை கணித்து விட முடியும். அது மட்டுமில்லாமல் அதிர்ஷ்டம் பெற எண் கணிதத்தில் சில வழிகளும் சொல்லப்பட்டுள்ளன.
அந்தவகையில், எண் கணிதத்தில் இருக்கும் 1 முதல் 9 வரை எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையது. கிரகத்தின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். இந்நிலையில், எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியை வைத்து அதிர்ஷ்டம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எண் கணிதத்தின் படி 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 1இன் கீழ் வருவார்கள். சூரியன் தான் எண் 1க்கு அதிபதி. எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்களிடம் தலைமை பண்புகள் இருக்கும். இவர்களிடம் இருக்கும் கோபம் மற்றும் வெளிப்படையாக பேசும் குணம் எதிரிகளை அதிகரிக்கும். இவர்கள் தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் குடும்பத்தில் பிரச்சனைகள் தான் அதிகரிக்கும். ஆரஞ்சு மற்றும் சிவப்பு தான் இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம். 2, 3, 4, 5, 6 மற்றும் 9 தான் அதிர்ஷ்ட எண். ஆகவே எண் 1ல் பிறந்தவர்கள் தங்களது அதிர்ஷ்ட எண் மற்றும் நிறத்தை பயன்படுத்தினால் அதிர்ஷ்டத்தால் வெற்றி உங்கள் பக்கம்.
எண் கணிதத்தின்படி 2, 11, 20 மற்றும் 30 ஆகிய தேதிகளில் எண் 2ன் கீழ் வருவார்கள். எண் 2இன் அதிபதி சந்திரன். இந்த எண்ணில் பிறந்தவர்களிடம் கருணை, அன்பு நிறைந்திருக்கும். இவர்கள் யாரையும் புண்படும்படி பேச மாட்டார்கள். மேலும் எளிதில் யாருடனும் பழக மாட்டார்கள். அந்த அளவிற்கு இவர்கள் ரொம்பவே மென்மையானவர்கள் இவர்களுக்கு நண்பர்கள் குறைவாகவே இருப்பார்கள். வேலையில் நிலையாகவும், கொடுக்கும் வேலையை சிறப்பாகவும் செய்து முடிப்பார்கள். இதனால் இவர்கள் அனைத்திலும் வெற்றியை காண்பார்கள். ஒருவேளை தோல்வியடைந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்து விடுவார்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. எண் 1, 2, 3 மற்றும் 5 இவர்களின் அதிர்ஷ்ட எண் ஆகும். ஆகவே தங்களது அதிர்ஷ்ட நிறம் மற்றும் எண்ணை சரியாக பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் இவர்கள் பக்கம்.
எண் கணிதத்தின்படி 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் எண் 3ன் கீழ் வருவார்கள். எண் 3இன் அதிபதி வியாழன். இவர்கள் ரொம்பவே புத்திசாலியாகவும், எந்தவொரு விஷயத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் இவர்களிடம் இருக்கும். எல்லோரிடமும் அன்பாக பழகுவார்கள். கடுமையான உழைப்பாளி. மஞ்சள் நிறம் இவர்களது அதிர்ஷ்ட நிறமாகும். எண் 1, 2, 3, 5 மற்றும் 9 இவர்களின் அதிர்ஷ்ட எண் ஆகும். ஆகவே அதிர்ஷ்டம் பெற தங்களது அதிஷ்ட எண் மற்றும் நிறத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்.
எண் கணிதத்தின்படி 4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் எண் 4ன் கீழ் வருவார்கள். எண் 4இன் அதிபதி ராகு. இவர்கள் ரொம்பவே தைரியமானவர்கள். எந்த வேலை செய்தாலும் அதை திட்டமிட்டு செய்து முடிப்பார்கள். வெளீர் நீலம் இவர்களின் அதிர்ஷ்ட நிறமாகும். அதுபோல எண் 1, 5, 6 மற்றும் 7 இவர்களின் அதிர்ஷ்ட என்ன ஆகும். எனவே இவர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வாழ்க்கையில் வெற்றி பெற தங்களது அதிர்ஷ்ட எண் மற்றும் நிறத்தை சரியாக பயன்படுத்தினால் மட்டும் போதும்.
எண் கணிதத்தின்படி 5, 14, மற்றும் 23 ஆகிய எண்கள் எண் 25ன் கீழ் வருவார்கள். எண் 5இன் அதிபதி புதன். இவர்கள் எல்லா துறையிலும் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் நல்ல பேச்சாளர்கள். இந்த பேச்சால் பிறரை சுலபமாக ஈர்ப்பார்கள். ஆனால் இவர்கள் தங்களது ரகசியத்தை ஒருபோதும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவே மாட்டார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை மற்றும் 1, 2, 4, 5, 6 மற்றும் 8 இவர்களின் அதிர்ஷ்ட எண்மாகும். ஆகவே இவர்கள் தங்களது அதிர்ஷ்ட நிறம் மற்றும் எண்ணை நல்லபடியாக பயன்படுத்தினால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றியை காண்பார்கள்.
எண் கணிதத்தின்படி 6, 15, மற்றும் 24 ஆகிய தேதிகளில் எண் 6ன் கீழ் வருவார்கள். எண் 6இன் அதிபதி சுக்கிரன். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்பவே அழகாகவும் பிறரை ஈர்க்கும் வகையில் இருப்பார்கள். இவர்களின் புன்னகை நிறைந்த முகத்தால் நண்பர்கள் இவர்களுக்கு நிறைய உருவாகும். ஆனால் இவர்கள் தங்களது ரகசியங்களை யாரிடமும் சொல்ல மாட்டார்கள், யாராலும் இவர்களது ரகசியங்களை எளிதில் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் இவர்களிடம் பொறாமை குணம் இருக்கும். இந்த தேதிகளில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண் வெள்ளை மற்றும் பிங்க். எண்கள் 4,5,6,7 மற்றும் 8 ஆகியவை இவர்களது அதிஷ்ட எண் ஆகும். ஆகவே இவர்கள் அதிர்ஷ்டம் பெற தங்களது அதிர்ஷ்ட எண் மற்றும் நிறத்தை சரியாக பயன்படுத்தினால் போதும்.
எண் கணிதத்தின்படி 7, 16, மற்றும் 27 ஆகிய தேதிகளில் எண் 7ன் கீழ் வருவார்கள். எண் 7இன் அதிபதி கேது. இந்த தேதியில் பிறந்தவர்களிடம் கீழ்ப்படியும் குணம் நிறைந்திருக்கும். இதனால் இவர்கள் துரோகத்தை நிறைய சந்திப்பார்கள். ஆடம்பரத்தை விரும்பாமல் எளிமையான வாழ்க்கை தான் வாழ விரும்புவார்கள். முக்கியமாக இவர்கள் தங்களது ரகசியத்தை யாருடனும் சொல்லமாட்டார்கள். வேலையை முழுமையாக செய்து முடிப்பார்கள். கருப்பு மற்றும் வெள்ளை இவர்களின் அதிர்ஷ்ட நிறம். எண்கள் 4,5,6 மற்றும் 8 இவர்களது அதிர்ஷ்ட எண். எனவே இந்த தேதியில் பிறந்தவர்கள் தங்களது அதிர்ஷ்ட எண் மற்றும் நிறத்தை சரியாக பயன்படுத்தும் போது அதிர்ஷ்டத்தின் தயவால் வெற்றியை கண்டிப்பது உறுதி.
எண் கணிதத்தின்படி 8, 17, மற்றும் 26 ஆகிய தேதிகளில் எண் 8ன் கீழ் வருவார்கள். எண் 8இன் அதிபதி சனி. இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் எதை செய்தாலும் மெதுவாக செய்வார்கள். ரொம்பவே கடின உழைப்பாளிகள். எந்த கடினமான சூழ்நிலையையும் எளிதாக சமாளித்து முடிப்பார்கள் செய்யும் வேலையை சரியாக செய்து முடிப்பார்கள். இலக்கை அடையும்வரை முயற்சிப்பார்கள். ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் அடர் நீளம் மற்றும் கருப்பு ஆகும்.
எண் கணிதத்தின்படி 9, 18, மற்றும் 27 ஆகிய தேதிகளில் எண் 9ன் கீழ் வருவார்கள். எண் 9இன் அதிபதி செவ்வாய். இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் சமூக சேவை செய்வதில் ஆர்வமாக இருப்பார்கள். சொல்ல போனால் குடும்பத்தை விட சமூகத்தின் மீதுதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதிர்காலத்தை குறித்து ஒருபோதும் கவலைப்படவே மாட்டார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ரிஸ்க் எடுப்பது தவிர்ப்பது நல்லது இல்லையெனில் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. எண்கள் 1, 3,5, மற்றும் 7 இவர்களின் அதிர்ஷ்டம் எண் ஆகும்.