ஜோதிட சாஸ்திரங்களின்படி கிரகங்களின் சேர்க்கை ஒருவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரண்டு கிரகங்கள் சேரும் பொழுது அல்லது பிரியும் பொழுது சில ராசிகளுக்கு யோகத்தையும், சில ராசிகளுக்கு மோசமான பலன்களையும் தரக்கூடும். அந்த வகையில் செவ்வாய் மற்றும் கேது கிரகங்களின் சேர்க்கை ஜூலை 29, 2025 முதல் முடிவுக்கு வருகிறது. செவ்வாய் தைரியம், ஆற்றல், கோபம், நிலம், சகோதர உறவுகள், விபத்துக்கள் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். கேது ஞானம், ஆன்மீகம், மோட்சம், பிரிவினைகள், தடைகள், குழப்பம், விபத்துக்கள் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். இந்த இரண்டு கிரகங்களும் சேரும்பொழுது சில நேர்மறை பலன்களையும், சில எதிர்மறை பலன்களையும் தரக்கூடும். இந்த சேர்க்கை முடிவுக்கு வரும் பொழுது அதன் எதிர்மறை விளைவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.