தர்ம கர்மாதிபதி யோகம் என்பது ஒன்பதாம் மற்றும் பத்தாம் வீட்டு அதிபதிகள் இணைந்து நன்மை பயக்கும் ஒரு அரிய யோகம். இதனால் இறைபணி, சமூக சேவை, உயர் பதவிகள், புகழ், செல்வம் போன்ற பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்க்கை தெய்வீக உயர்வு, ஆன்மீக அமைதியை அடையும்.
தர்ம கர்மாதிபதி யோகம் – வாழ்க்கையை உயர்த்தும் தெய்வீக அமைப்பு
ஒருவரின் ஜாதகம் அவர்களையும் அவர்களை சார்ந்தவர்களையும் உச்சத்தில் கொண்டு சேர்க்கும் வல்லமை கொண்டது. கட்டம் சரியாக இருந்தால் ராஜா போல் வாழ்க்கை கிடைக்கும். ஒருவரின் ஜாதகம் என்பது, அவனது வாழ்க்கை நெறிகளும், வளர்ச்சிப் பாதையும், இறைச் சக்தியோடு உள்ள தொடர்பும் வெளிப்படக் கூடிய தெய்வீக நெறிமுறை என்றால் அது மிகையல்ல. ஜோதிடத்தில் மிக முக்கியமான மற்றும் நன்மை தரக்கூடிய ஒரு யோகம் தான் தர்ம கர்மாதிபதி யோகம்.
26
தர்ம கர்மாதிபதி யோகம் என்பது என்ன?
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு பிறகு ஒன்பதாம் வீடு தர்ம ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. இது அறம், பக்தி, நற்பண்பு, நற்பேறு, உயர் எண்ணங்கள் போன்றவற்றைக் குறிக்கிறது. அதேபோல் பத்தாம் வீடு கர்ம ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. இது தொழில், பதவி, புகழ், சமூகப் பொறுப்புகள், வாழ்க்கையில் உயர்வு போன்றவற்றை குறிக்கிறது. இந்த இரண்டையும் ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பு ஏற்பட்டால், அதனை தர்ம கர்மாதிபதி யோகமாகும். இதற்கான முக்கிய நிபந்தனை லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியும் பத்தாம் வீட்டு அதிபதியும் ஒன்றாகச் சேர்ந்து, நட்பு பார்வையுடன் ஒரு வீட்டில் கூடி நிற்பது.
36
இந்த யோகம் உள்ளவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
தர்ம கர்மாதிபதி யோகம் உள்ளவர்கள், சாதாரணமாக எந்த ஒரு காரியத்தையும் சுயநலமின்றி செய்பவர்கள். இவர்களின் வாழ்க்கைதோறும், இறைபணி அல்லது சமூக சேவை ஒன்று இடம் பிடித்திருக்கும். சிலர் சிறுவயதிலேயே ஆன்மிக பாதையில் ஈடுபடுவார்கள். தர்மத்திற்காக வாழ்வார்கள் என்றால் அது மிகையல்ல. கோயில்கள் கட்டுவது, கும்பாபிஷேகம் நடத்துவது, தினமும்அன்னதானம் செய்வது போன்ற பணிகளை இவர்களே தங்கள் சொந்த செலவில் செய்வார்கள். பொதுத்தொண்டு செய்யும் பணிகளில் தங்களை முழுமூச்சாக ஈடுபடுத்திக்கொள்ளும் இவர்கள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அறக்கட்டளைகள் ஆகியவைகளுக்கு நன்கொடை வழங்குவர். சிலர் கோயில் பணிகளை, தன் நேரத்தை ஒதுக்கி செய்வார்கள். இவர்களுக்கு இறை பணிகளில் நிம்மதியும உயர்வும் கிடைக்கும். தன் சொத்தின் ஒரு பகுதியை மக்கள் நல திட்டங்களுக்காக செய்வார்கள். குடும்பமே அறக்கட்டளை மாதிரியாக மாறும்.
இந்த யோகம், மிகச் சாதாரணமாக யாரிடமும் உருவாகாது. இதற்கு சிறந்த கிரக நிலை தேவை. குறிப்பாக, ஒன்பதாம் மற்றும் பத்தாம் வீட்டு அதிபதிகள் நலமாக இருக்க வேண்டும். பாப கிரகங்களால் பாதிக்கப்படக்கூடாது.நேர்மறை பாவங்களில் இருந்து பார்வை இருக்க வேண்டும். ஒருவருக்கொன்று நட்பாகவும், அல்லது யோகவழி கிரகமாகவும் இருக்க வேண்டும்.
66
நல்லது செய்யும் நல்லவர்கள்!
தர்ம கர்மாதிபதி யோகம் உள்ளவர்கள் இறையருள் பெறும் பணிக்காகவும் வாழ்கிறார்கள். இவர்களின் வாழ்கை ஒரு பிறவிக்கே தரும் பயனாக அமையும். இதுபோன்ற யோகம் உள்ளவர்கள், தங்கள் ஜாதகத்தை உணர்ந்து, அதற்கேற்றவாறு வாழ்க்கை நடத்தினால், தெய்வீக உயர்வும், ஆன்மீக அமைதியும், சமூக மதிப்பும் நிச்சயம் கிடைக்கும். இது ஒரு அரிய யோகம். இறைவன் அருளால் மட்டுமே ஏற்படக்கூடியது!