நல்லதை விதைத்து நல்லதை மட்டும் அறுவடை செய்யும் அதிரஷ்டசாலிகளான ரிஷப ராசி நேயர்களுக்கு கடன் என்பதை எளிதில் கடந்து செல்லும் யோகம் கிடைக்குமாம். இந்த ராசிக்காரர்கள் நிலைத்தன்மையுடன், பொறுப்புடன் வாழக்கூடியவர்கள் என்பதால் வெற்றி எப்போதும் இவர்கள் வீட்டு வாசலில் குடியிருக்கும். வீண் செலவுகளை தவிர்த்து, ஒவ்வொரு பணத்தையும் சேமிக்கத் தெரிந்தவர்கள் ரிஷப ராசியினர். கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும், அதை விரைவில் முடித்துவிடும் யோகமுள்ளது. சொத்து சேர்ப்பதில் அதிர்ஷ்டசாலிகள் ரிஷப ராசியினர். தொழில், வியாபாரம், முதலீடுகளில் மேன்மை காண்பார்கள்.
பதவி யோகம்: அரசு துறைகளில், தனியார் நிறுவனங்களில் மேலாளராய் பதவி உயர்வு ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி
வழிபாடு: வெள்ளிக்கிழமை சிவப்பு மலர்களால் லட்சுமி தேவியை பூஜிக்கவும்.
பரிகாரம்: தினமும் “ஓம் மகாலட்ச்ம்யை நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கலாம்.