
லட்சுமி நாராயண யோகம் வேத ஜோதிடத்தில் மங்களகரமான யோகமாக அறியப்படுகிறது. சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இணையும் பொழுது இந்த மங்களகரமான யோகம் உருவாகிறது. ஆடம்பரம், அழகு, காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரகராக விளங்கும் சுக்கிர பகவானும், புத்திசாலித்தனம், கல்வி, அறிவு, பேச்சு, வணிகம் ஆகியவற்றின் காரகராக விளங்கும் புதன் பகவானும் விருச்சிக ராசியில் இணையுள்ளனர்.
சுக்கிர பகவான் மகாலட்சுமியின் அம்சமாகவும், புதன் பகவான் நாராயணரின் அம்சமாகவும் கருதப்படுகின்றனர். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையானது வாழ்வில் அறிவு, செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவற்றை கொண்டு வரும். அக்டோபர் 24 ஆம் தேதி புதன் பகவான் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். நவம்பர் 26 அன்று சுக்கிர பகவானும் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
எனவே இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த ராஜயோகத்தால் பலன் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிக ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் இந்த ராஜயோகம் உருவாகதால் இந்த ராஜயோகத்தின் மூலம் முழு பலன்களையும் விருச்சிக ராசிக்காரர்கள் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். வணிகத்தில் தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் தன்னம்பிக்கை, ஆளுமைத் திறன், தைரியம் ஆகியவை அதிகரிக்கும். உங்கள் தோற்றம் மற்றும் பேச்சில் ஒரு வசீகரம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பு உள்ளது.
மேஷ ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகம் உங்கள் ஜாதகத்தின் எட்டாம் வீட்டில் உருவாகிறது. எனவே இந்த காலக்கட்டத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம், திடீர் பணவரவு உண்டாகும். வெளிநாட்டு பயணங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் மூலம் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். அரசு வேலைக்கு தயாராகும் மாணவர்கள் அல்லது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட காலமாக இருந்து வந்த கடன் பிரச்சினைகள் மற்றும் பணப் பிரச்சினைகள் தீர்ந்து நிதி நிலைமையில் உயர்வு ஏற்படும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் உங்கள் ராசியின் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சிம்ம ராசிக்காரர்கள் பொருள், இன்பம் ஆகியவற்றைப் பெறுவீர்கள். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்கும். உறவினர்களுடனான உறவு வலுப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
துலாம் ராசிக்காரர்கள் லட்சுமி நாராயண யோகத்தால் நிதி சார்ந்த பலன்களைப் பெறுவீர்கள். திடீர் பணவரவால் நிதி நிலைமை கணிசமாக மேம்படும். கடினமான நேரங்களில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி கிடைக்கும். வேலையில் புதிய வாய்ப்புகள் அல்லது பதவி உயர்வுகளை பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகும். இந்த லட்சுமி நாராயண யோகம் சுப பலன்களை அதிகரிக்கவும், வாழ்வில் செழிப்பை கொண்டு வருவதற்கான பொன்னான வாய்ப்பாக அமையும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)