Surya Shukra Yuti in Libra: நவம்பர் 2, 2025 சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே துலாம் ராசியில் சூரிய பகவான் பயணித்து வரும் நிலையில் இந்த கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பார்க்கலாம்.
துலாம் ராசியானது சூரிய பகவானுக்கு நீச்சம் பெறும் ராசியாக கருதப்படுகிறது. இந்த ராசியில் சூரியன் தனது முழு பலத்தையும் வெளிப்படுத்த முடியாமல் பலவீனமான நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் சுக்கிரனும் நவம்பர் 2 முதல் துலாம் ராசிக்குள் நுழைந்திருக்கிறார். இது சுக்கிரனின் சொந்த ராசியாகும். சூரியன் மற்றும் சுக்கிரன் இருவரும் எதிரெதிர் குணங்களைக் கொண்ட கிரகங்களாகும்.
சுக்கிர பகவான் அன்பு, மகிழ்ச்சி, ஆடம்பரம், உறவுகள், சமநிலையை குறிக்கும் கிரகமாகவும், சூரியன் அதிகாரம், தன்னம்பிக்கை, ஈகோ ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகவும் இருக்கின்றனர். இந்த இரண்டு எதிர் கிரகங்களின் இணைப்பால் சில ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களை அனுபவிக்க உள்ளனர்.
25
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த இரண்டு கிரகங்களின் இணைவால் சில எதிர்மறை பலன்களை அனுபவிக்கலாம். சுக்கிரன் உங்கள் ராசியின் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பது திருமண உறவு, கூட்டுத் தொழிலில் சில சிக்கல்களை கொண்டு வரலாம். சூரியனின் தாக்கத்தால் உறவுகளில் ஈகோ பிரச்சனைகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உடனான வாக்குவாதங்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. உறவுகள் மற்றும் கூட்டாண்மைகளில் சில பதற்றங்கள் ஏற்படலாம். உங்களின் நம்பிக்கைக்குரியவர்களே உங்களை ஏமாற்றக்கூடும். வணிகம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவுகளை சில நாட்களுக்கு ஒத்தி வைப்பது நல்லது.
35
துலாம்
சுக்கிரன் உங்கள் ராசிநாதன் என்பதால் உங்கள் ராசியிலேயே பலத்துடன் இருக்கிறார். இருப்பினும் சூரியனின் சஞ்சாரம் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆரோக்கியத்தில் சில ஏற்ற இறக்கங்களை கொடுக்கலாம். தலைமைப் பண்பில் தீவிரம் கூடினாலும் சில சமயம் அதிகாரம் செலுத்த நினைப்பதால் பின்னடைவுகளை சந்திக்கலாம். இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் நிறைந்து காணப்படலாம். வீட்டிலும் வேலையிலும் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். நவம்பர் 2 தொடங்கி நவம்பர் 16 வரை சவாலான நிலையை சந்திக்கலாம். நவம்பர் 16 சூரியன் துலாம் ராசியில் இருந்து வெளியேறி விருச்சிக ராசிக்கு செல்வது வரை நீங்கள் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டியது அவசியம்.
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சூரியன் இணைவு தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் ஏற்படுகிறது. இது தொழிலில் அதிகாரம், பதவி உயர்வுக்கு வழி வகுத்தாலும் பணி சார்ந்த உறவுகளில் ஈகோ மோதல்கள் வரலாம். மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் அல்லது தேவையற்ற விமர்சனங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த காலக்கட்டத்தில் நீங்கள் நிதி சார்ந்த இழப்புகளை சந்திக்க நேரிடும். தவறான முடிவுகளை எடுக்கவும் நேரிடலாம். ஒருவரை கண்மூடித்தனமாக நம்புவது மிகுந்த தீங்கு விளைவிக்கும். எனவே விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
55
கடகம்
சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை கடக ராசியின் நான்காவது வீடான சுக ஸ்தானத்தில் நிகழ்கிறது. இது தாயின் ஆரோக்கியம் அல்லது வீட்டில் இணக்கமற்ற சூழலை ஏற்படுத்தலாம். வீட்டுத் தேவைகள் அல்லது ஆடம்பரங்களுக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடலாம். மனதில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டுச்சூழலை பேணுவதிலும் தாயின் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அமைதியாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டியது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)