sukran swati nakshatra transit 2025: ஜோதிடத்தின்படி சுக்கிர பகவான் விரைவில் ராகு பகவான் ஆளும் சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். சுக்கிரனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தின்படி சுக்கிர பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். இவர் ஒருவரின் வாழ்க்கையில் அன்பு, அழகு, செல்வம், ஆடம்பரம், திருமணம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை குறிக்கும் கிரகமாக விளங்குகிறார். இவர் ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு மாறும்பொழுது அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது. வருகிற நவம்பர் 7 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசியில் உள்ள சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி ராகு பகவான் ஆவார். துலாம் ராசி சுக்கிரனின் சொந்த வீடாகும்.
தனது சொந்த வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் சுவாதி நட்சத்திரத்தில் நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு விசேஷமான நற்பலன்கள் கிடைக்க இருக்கிறது. சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
26
மேஷம்
மேஷ ராசியின் ஏழாவது வீட்டில் சுவாதி நட்சத்திரத்தில் சுக்கிர பகவான் சஞ்சரிக்கிறார். இது மிகவும் மங்களகரமான அமைப்பாகும். இதன் காரணமாக உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும், புரிதலும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வெற்றியைத் தரும். கூட்டுத் தொழில் செய்து வருபவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் அதிகரிப்பதால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். இதன் காரணமாக நிதி நிலைமை உயரும். முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
36
சிம்மம்
சுக்கிரன் உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் நுழைய இருக்கிறார். இதன் காரணமாக சிம்ம ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மையை அனுபவிப்பீர்கள். உங்கள் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தகவல் தொடர்புத் திறன் மேம்படும். இது வேலை அல்லது வியாபாரத்தில் முக்கிய பேச்சுவார்த்தைகளில் வெற்றியை தேடித்தரும். குறுகிய தூரப் பயணங்கள் செய்வீர்கள். இதன் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்கள் உடனான உறவு மேம்படும். சுக்கிரனின் அருள் காரணமாக உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கும்.
சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இந்த ராசிக்கு ஏற்கனவே ஏற்பட்டுள்ள மாளவ்ய ராஜயோகத்தின் பலன்கள் மேலும் அதிகரிக்கும். உங்கள் ஆளுமைத் திறன் மேம்படும். இந்த காலக்கட்டம் சமூகத்திலும், பணியிடத்திலும் உங்களுக்கு சிறந்த மதிப்பை பெற்று தரும். வாழ்க்கைத் தரம் உயரும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை மற்றும் வசதிகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். ஒட்டுமொத்தமாக நவம்பர் மாதத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
56
மகரம்
சுக்கிரன் உங்கள் ராசியின் பத்தாவது வீடான தொழில் மற்றும் கர்ம ஸ்தானத்தில் பயணிக்க இருக்கிறார். இதன் காரணமாக தொழிலில் மிகப்பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். சம்பள உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. மூத்த அதிகாரிகள் அல்லது அரசுத் துறைகளின் ஆதரவு கிடைக்கும். இது உங்கள் தொழில் பாதையை வலுப்படுத்தும். தொழிலின் மூலம் நிதி ஆதாயம் அதிகரிக்கும். தொழில் முறை உறவுகள் மேம்படும்.
66
கும்பம்
சுக்கிரன் உங்கள் ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானம் அல்லது அதிர்ஷ்ட வீட்டில் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தந்தையின் ஆதரவும், வழிகாட்டுதலும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயங்கள் கிடைக்கலாம். உயர் கல்வி படிப்பவர்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் கனவு நனவாகும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். இது உங்களை மனதளவில் பலப்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)