
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2, 2026 அன்று குரு பகவான் ரிஷப ராசியின் தனம், வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானத்திலிருந்து மூன்றாம் வீடான தைரியம் மற்றும் வீர ஸ்தானத்திற்கு மாறுகிறார். மேலும் தனது ஐந்தாம் பார்வையால் ஏழாவது வீடான களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தையும், ஒன்பதாவது பார்வையால் 11வது வீடான லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார். மேலும் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று 43 நாட்கள் நேர்கதியில் பயணிக்க இருக்கிறார். 01-11-2026 முதல் 25-01-2027 வரை 42 நாட்கள் வக்ர கதியிலும் (பின்னோக்கிய நிலைநிலும்) சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக ரிஷப ராசிக்கு ஏற்படக்கூடிய பொதுவான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
Mithunam Guru Peyarchi Palangal 2026 in Tamil: மிதுனம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026
உச்ச குருவானவர் தைரிய ஸ்தானத்தில் அமர்வது என்பது சிறப்பான அமைப்பாகும். இதுவரை தன ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த அவர் மூன்றாம் வீடான தைரியம் மற்றும் சகாய ஸ்தானத்திற்கு செல்கிறார். இது ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வெற்றிகளை உருவாக்கித் தரக்கூடிய அமைப்பாகும். ரிஷப ராசியினர் எடுக்கும் அனைத்து புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். சாதகமான சந்தர்ப்பங்களை குரு பகவான் உருவாக்கித் தரப் போகிறார். புகழ், அந்தஸ்து, கௌரவம் இந்த காலகட்டத்தில் உயரப்போகிறது. பொருளாதார நிலை சாதகமாக மாறும்.
அனைத்து விதமான ஏற்ற தாழ்வுகளையும் சமாளிக்கும் மன வலிமை உண்டாகும். நீண்ட காலமாக தள்ளிப் போய்க் கொண்டிருந்த வியாபார முயற்சிகளை தைரியமாக தொடங்கி வெற்றிகளைக் காண்பீர்கள் சகோதரர்கள் வழியில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி உறவுகள் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ப சம்பள உயர்வு, பதவி உயர்வு அல்லது விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும். மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி, எதையும் எதிர்கொள்ளும் அசாத்திய தன்னம்பிக்கை பிறக்கும்.
Kadagam Guru Peyarchi Palangal 2026 in Tamil | கடகம்: குருப்பெயர்ச்சி பலன்கள்- 2026
குரு பகவானின் ஐந்தாம் பார்வை ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் விழுகிறது. இதன் காரணமாக ஜாதக ரீதியான தோஷங்கள், சாபங்கள் விலகி திருமணத் தடைகள் அகலும். காதல் திருமணத்திற்கு தடையாக இருந்த பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். திருமணமான தம்பதிகள், குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வார்கள். விவாகரத்து வழக்குகள் தள்ளுபடி ஆகும். நண்பர்கள், கூட்டுத் தொழில் செய்து வருபவர்கள், வாடிக்கையாளர்கள், வாழ்க்கை துணை ஆகியவர்களால் சகாயமான காரியங்கள் நடக்கும்.
Simmam Guru Peyarchi Palangal 2026 in Tamil | சிம்மம்: குருப்பெயர்ச்சி பலன்கள் 2026
குரு பகவானின் ஏழாம் பார்வை ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் விழுகிறது. இதன் காரணமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். பித்ரு தோஷம் உள்ளவர்களில் அதிலிருந்து விடுபடுவீர்கள். தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். தடைபட்ட திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத நிலை ஆகியவை முடிவுக்கு வரும். கடன் தொல்லைகள் சீராகும். முன்னேற்றத்தை நோக்கிய அடுத்த படியை எடுத்து வைப்பீர்கள். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக உணர்வீர்கள். உங்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் மீண்டும் உங்களை புரிந்து கொண்டு உங்களுடன் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
Kanni Rasi Guru Peyarchi Palangal 2026 in Tamil | கன்னி: குரு பெயர்ச்சி 2026 பலன்கள்
குரு பகவானின் ஒன்பதாம் பார்வை பதினோராம் வீடான லாப ஸ்தானத்தில் விழுகிறது. இது விருப்பங்களும், ஆசைகளும் நிறைவேற கூடிய காலம் உருவாவதை குறிக்கிறது. கோச்சார குருவின் பார்வை 11ஆம் வீட்டில் பதிவதால் உங்கள் வாழ்நாள் கனவுகள், எண்ணங்கள், லட்சியங்கள் நிறைவேறும் காலம் நெருங்கி உள்ளது. அனைத்து துறைகளிலும் வெற்றியைக் காண்பீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் துலங்கும். சிறிய லாபம் பார்த்தவர்கள் இனிய பெரிய லாபத்தைப் பார்ப்பீர்கள். சிறு தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். மூத்த சகோதரன் அல்லது தந்தை வழியில் சித்தப்பா, பெரியப்பாவிடமிருந்து பண ஆதாயங்கள் கிடைக்கலாம். மருமகளால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனைகள் தீரும். இந்த காலகட்டத்தில் அதிக பண வரவால் ஆடை, ஆபரணங்கள், பொன் பொருள், நிலம், மனை போன்றவற்றின் சேர்க்கை நடைபெறும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு வரமாக மாறும்.
Thulam Rasi Guru Peyarchi Palangal 2026 | துலாம்: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026
அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு மல்லிகை பூவால் கட்டிய மாலையை சாற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு தீபம் ஏற்றி வழிபடுவது வாழ்வில் பொருளாதாரம் முன்னேற்றத்தை அளிக்கும்.