Rasi palan 2026: பிப்ரவரியில் 3 ராசிகளுக்கு தொடங்கும் சுக்கிர திசை.! பணம், நகை, சொத்துக்கள் குவியும்.! உங்க ராசி இருக்கா?

Published : Jan 23, 2026, 02:18 PM IST

Shukraditya Rajyog 2026: பிப்ரவரி 2026-ல் சக்தி வாய்ந்த சுக்கிராதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் சில ராசிகளுக்கு செல்வம் மற்றும் வெற்றியைத் தர இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
14
சுக்ராதித்ய ராஜயோகம் 2026

ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிப்ரவரி 2026-ல், சூரியனும் சுக்கிரனும் கும்ப ராசியில் இணைவதால் சுக்கிராதித்ய ராஜயோகம் உருவாகிறது. செல்வம் ஆடம்பரம் பொன் பொருள் வசதிகளின் காரகரான சுக்கிர பகவானும் கிரகங்களின் ராஜாவான சூரிய பகவானும் இணைவது சில ராசிகளுக்கு செல்வம், தொழில் முன்னேற்றம் மற்றும் வசதிகளை அள்ளித் தரும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
மிதுனம்

மிதுன ராசிக்கு சுக்ராதித்ய ராஜயோகம் சாதகமான மாற்றங்களைத் தரும். இந்த ராஜ யோகம் ஆனது மிதுன ராசியின் அதிர்ஷ்ட வீட்டில் உருவாகிறது எனவே இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் கூடும். நிலுவையில் உள்ள பணிகள் முடியும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் உண்டாகும். சொத்து பிரச்சனைகள் தீரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி மனமகிழ்ச்சி அடைவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

34
துலாம்

துலாம் ராசிக்கு இந்த ராஜயோகம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ராஜயோகம் உங்கள் ராசியின் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் உருவாகிறது. இதன் காரணமாக காதல், குழந்தைகள் மற்றும் படைப்பாற்றல் சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும். திடீர் பண வரவு ஏற்பட்டு நிதி நிலைமை வலுப்பெறும். எதிர்பாராத பண வரவால் சொத்து சேர்க்கை நடைபெறும். வாழ்க்கைத் துணைக்கு தங்க ஆபரணங்களை வாங்கி கொடுத்து மன மகிழ்வீர்கள். திருமணமாகதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் தேடி வரும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.

44
கும்பம்

கும்ப ராசிக்கு இந்த யோகம் மிகவும் நன்மை பயக்கும். கும்பராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் இந்த ராஜயோகம் உருவாக இருக்கிறது. எனவே பிப்ரவரி மாதம் முதல் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றிகளை காண்பீர்கள். குழப்பமான மனநிலையில் இருந்து விடுபட்டு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சமூகத்தில் மரியாதை உயரும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பரம்பரை சொத்துக்களில் இருந்த தகராறுகள் தீர்க்கப்படும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக நடக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்கள் வாரிசுகளுக்கு கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories