February 2026 Horoscope: பிப்ரவரி 2026-ல் கிரகப் பெயர்ச்சிகள் காரணமாக பல சுப யோகங்கள் உருவாகின்றன. கும்பத்தில் பல கிரகங்கள் ஒன்று சேர இருப்பதால் ஐந்து ராஜயோகங்கள் உருவாகின்றன. இதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
ஜோதிடத்தின்படி பிப்ரவரி 3, 2026 அன்று, புதன் கும்ப ராசியில் நுழைந்து ராகுவுடன் இணைவார். பிப்ரவரி 6 அன்று சுக்கிரனும், பிப்ரவரி 13 அன்று சூரியனும், பிப்ரவரி 23 அன்று செவ்வாயும் கும்ப ராசியில் நுழைய இருக்கின்றனர். இதன் காரணமாக, லட்சுமி நாராயண யோகம், சுக்ராதித்ய யோகம், ஆதித்ய மங்கள யோகம், புதாதித்ய யோகம் மற்றும் சதுர்கிரஹி யோகங்கள் உருவாகும். இந்த ஐந்து சுப யோகங்களும் கும்ப ராசியிலேயே உருவாகப் போகின்றன. எனவே, இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்க இருக்கிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
26
மேஷம்
பிப்ரவரி 2026 மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். வேலைகளில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு போனஸ் அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். இந்த மாதம் அவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். செலவுகள் இருந்தாலும் கூட அவர்களால் சமாளிக்கக்கூடிய அளவுக்கு வருமானம் இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். செவ்வாய்க்கிழமை மாதுளை தானம் செய்வதும், ஹனுமனை வழிபடுவதும் நன்மை பயக்கும்.
36
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி முதல் நல்ல காலம் தொடங்க இருக்கிறது. குறிப்பாக பிப்ரவரி 17 முதல் நேரம் சாதகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடந்த காலத்தில் தடைபட்டிருந்த அனைத்து வேலைகளும் நிறைவடையும். பொருளாதார ரீதியாக மேன்மை கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். இந்த மாதம் வேலை மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. தொழில் செய்பவர்கள் தொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்வார்கள். சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு தானம் செய்வது மிகவும் நல்லது.
மிதுன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் பொற்காலத்தை வழங்க இருக்கிறது. முன்பு தடைபட்டு நின்ற அனைத்து வேலைகளும் நிறைவடையும். வீட்டின் சூழ்நிலைகள் மாறத் தொடங்கும். குடும்பத்தில் இருந்த தகலாறுகள் தீர்க்கப்படும். மன அழுத்தம் குறைந்து அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். உங்கள் குடும்பத்தினருடனோ அல்லது துணையுடனோ மகிழ்ச்சியான பயணம் மேற்கொள்வீர்கள். பிப்ரவரியில் நிதி ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அசையா சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள்.
56
கன்னி
பிப்ரவரி மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல முன்னேற்றத்தையும் நிதி வளத்தையும் தரும் மாதமாக இருக்கும். பிப்ரவரி மாதத்தில் தொழிலதிபர்களின் வருமானம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். இந்த நேரத்தில் எடுக்கும் முயற்சிகள் நிச்சயமாக வெற்றி பெறும். ஊழியர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக மாறும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு கூட்டாளிகளுடனான உறவுகள் வலுவடையும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
66
கும்பம்
பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசியில் ஐந்து யோகங்கள் உருவாகின்றன. இதன் காரணமாக, கும்ப ராசிக்கு பல சுப யோகங்கள் உருவாகின்றன. எனவே, பிப்ரவரி மாதம் இந்த ராசிக்கு சாதகமான மாதமாக இருக்கும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். அரசியல் தொடர்புகள் நன்மைகளைத் தரும். அவர்களுக்கு நிதி ஆதாயங்களும் வேலையில் வெற்றியும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)