Vish Yoga 2026: வசந்த பஞ்சமி நாளில் சனி பகவான் உருவாக்கும் விஷ யோகம்.! 3 ராசிகள் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்.!

Published : Jan 23, 2026, 10:45 AM IST

Vasantha Panchami: ஜோதிடத்தின்படி, இந்த ஆண்டு வசந்த பஞ்சமி ஜனவரி 23, 2026 அன்று வருகிறது. அன்றைய தினம் விஷ யோகமும் உருவாகிறது. இதன் தாக்கம் சில ராசிகளுக்கு பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

PREV
14
Vish Yoga 2026

ஜனவரி 23, 2026 வசந்த பஞ்சமி அன்று, சனி-சந்திரன் சேர்க்கையால் மீனத்தில் விஷ யோகம் உருவாகிறது. வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவியை வழிபடுவது பக்தர்களின் கலைகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதோடு, தொழில் வெற்றிக்கான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. வசந்த பஞ்சமி சரஸ்வதி தேவிக்கு உகந்த நாள் என்றாலும், விஷ யோகம் உருவாவதால் சில ராசிகளுக்கு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அந்த ராசிகள் பற்றி இங்கு காணலாம்.

24
ரிஷபம்

விஷ யோகம் காரணமாக ரிஷப ராசியினர் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குறிப்பாக ரிஷப ராசிக்காரர்கள் வேலையில் அதிக சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். அடுத்த சில தினங்களுக்கு அவர்கள் நிதிப் பிரச்சனைகளை சந்திக்கலாம். கணவன் மனைவி அல்லது குடும்ப உறவுகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட வசந்த பஞ்சமியன்று சரஸ்வதி தேவிக்கு தேங்காய் மற்றும் மஞ்சள் வஸ்திரம் படைத்து வழிபடுவது நல்லது.

34
சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இந்த காலக்கட்டம் வேலையில் பல சோதனையான காலக்கட்டத்தை வழங்கும். பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் சிக்கல்கள் அல்லது வேலை பறிபோகுதல் போன்றவை நடக்கலாம். மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே இந்த நேரத்தில் பொறுமையின்மையை கடைவிட வேண்டாம். இந்த நேரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். 'ஓம் சரஸ்வதி தேவி நமோ நமஹ' மந்திரத்தை 108 முறை சொல்வது பிரச்சனைகளை குறைக்க உதவும்.

44
விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு இது கடினமான காலமாகும். அடுத்த சில தினங்கள் சிரமங்கள் நிறைந்ததாக இருக்கலாம். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத தகராறுகள் ஏற்படலாம் என்பதால் பொறுமை தேவை. திடீர் மருத்துவ செலவுகள் அல்லது எதிர்பாராத செலவுகள் காரணமாக உங்கள் நிதி நிலைமை மோசமடையலாம். வசந்த பஞ்சமி நாளில் மஞ்சள் பொருட்களை தானம் செய்வது விருப்பங்களை நிறைவேற்றும் ஏற்படும் தடங்கல்களிருந்து விடுபட உதவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories