கஜ கேசரி யோகம் என்பது குருவும் சந்திரனும் குறிப்பிட்ட வீடுகளில் இணைந்து உருவாகும் ஒரு சக்திவாய்ந்த ராஜயோகம். இது வாழ்க்கையில் மேன்மை, புகழ், செல்வம், உயர் பதவிகள் போன்ற பல நன்மைகளைத் தரும்.
அவருக்கு செம அதிர்ஷ்டம், எப்வுமே அவருக்கு ஜாக்பாட், அவர் எப்பவுமே ராசியான ஆள் என யாரைச்சும் சொல்லி கேள்விப்பட்டு இருக்கீற்களா? அப்படி இருந்தால் அவரின் ஜாதகத்தில் ஒரு முக்கியமான யோகம் இருக்கும். ஒரு ஜாதகத்தில் யாராவது அரசியலில் உயர்ந்த இடம் அடைந்து, கல்வி, செல்வம், வீடு, வாகனம், புகழ் என பல வளங்களை அனுபவிக்கிறார் என்றால், அதற்குப் பின்னால் ஒரு வலிமையான யோகம் இருக்க வாய்ப்பு அதிகம். அந்த வகையில், கஜ கேசரி யோகம் என்பது மிகவும் பலம் வாய்ந்த ஒரு ராஜயோகம். இந்த யோகம் உள்ளவர்கள் பொதுவாக வாழ்நாளில் மேன்மை பெறுவார்கள், மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள் என்பது நிதர்சனம்.
26
சந்திரனுக்கும் குருவுக்கும் இடையிலான பாசம்
கஜ கேசரி யோகம் உருவாக, சந்திரனுக்கும் குருவுக்கும் இடையில் ஒரு சிறப்பான அமைப்பு தேவைப்படும். சந்திரன் ஜாதகத்தில் எந்த வீட்டில் இருந்தாலும், அதன் நான்காவது, ஏழாவது அல்லது பத்தாவது வீட்டில் குரு இருந்தால் இந்த யோகம் அமையும். இதைக் கேந்திரத்திலுள்ள குரு என்பார்கள். இதில் சந்திரனும் குருவும் ஒரு வகையான நேச பந்தத்தில் இருக்கும் போது, இந்த யோகம் மிகுந்த பலன்கள் தரும். மேலும் குருவும் சந்திரனும் எந்த ராசியில் உள்ளன என்பதும் முக்கியமான விஷயம். குரு உச்சம் அல்லது ஸ்வக்ஷேத்திரத்தில் இருந்தால் யோகம் மிகவும் வலிமையாகும்.
36
மக்களிடம் செல்வாக்கு கிடைக்கும்
இந்த யோகம் உள்ளவர்கள் பொதுவாக நல்ல பேச்சாற்றல், ஞானம், சிந்தனை திறன், மக்களிடம் செல்வாக்கு போன்றவற்றை பெற்றிருப்பார்கள். அரசாங்க உத்தியோகங்களில் உயர்ந்த பதவிகள், அரசியலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரங்கள், பெரிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகள் ஆகியவை கிடைக்கும். கல்வி துறையில் மேற்படிப்புகள், வெளிநாடு பயணம் போன்ற வாய்ப்புகள் அதிகம் இருக்கும். சொத்து யோகம், வாகன யோகம், சொந்தமாக வீடு வாங்கும் யோகம் ஆகியவையும் இதன் ஒரு பகுதி.
இருப்பினும், இந்த யோகம் பலவீனமாகும் சூழ்நிலைகளும் உண்டு. குரு அல்லது சந்திரன் பாப கிரகங்களால் பாதிக்கப்படுவதால், யோகம் பலம்குறைவாகும். குருவின் திசை நேரத்தில் மட்டுமே இந்த யோகம் முழுமையாக செயல்படும். அதற்கு முன்னும் பின்னும் அதற்குரிய பவங்கள், பரிவர்த்தனங்கள் இருக்க வேண்டியுள்ளது. இந்த யோகம் உள்ளவர்கள் எதிரிகளை சந்திப்பதற்கான வாய்ப்பும் உண்டு. ஆனால், எதிரிகள் தோல்வியடைவார்கள் என்பதும் இந்த யோகத்தின் சிறப்பு.
56
குருவை வணங்கி பரிகாரம் செய்வது நல்லது
இந்த யோகம் உள்ளவர்கள் குருவை வணங்கி பரிகாரம் செய்வது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு, குரு பௌர்ணமி தினத்தன்று பூஜை செய்வது, குருவுக்கு பொருத்தமான தானங்களை வழங்குவது போன்றவை யோக பலனை வலுப்படுத்தும். குருவின் கிருபை பெற, நீதியான வாழ்க்கையை வாழ வேண்டியது கட்டாயம்.
66
செல்வாக்குடன் கூடிய ராஜயோகம்
மொத்தத்தில், கஜ கேசரி யோகம் என்பது ஒருவரின் ஜாதகத்தில் மிகுந்த வாய்ப்புகள், உயர்வுகள், செல்வாக்கு தரக்கூடிய ராஜயோகம். இந்த யோகம் உள்ளவர்கள் அதனை புரிந்துகொண்டு முயற்சி செய்து முன்னேறினால், வாழ்க்கை சிறப்பாக அமைந்து, புகழும் செல்வமும் உண்டாகும். நம் ஊர் சொல்படி அவர் முதமைச்சர் ஆக கூட வாய்ப்பு இருக்குமாம்.