
தெளிவான சிந்தனை கொண்ட மேஷ ராசி நேயர்களே, இன்று உங்களது உற்சாகம் உயர்ந்த நிலையில் இருக்கும். தைரியமான முடிவுகள் பயனளிக்கும். தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காணப்படும். பிரபலமான நபர்களின் அறிமுகம் உங்களின் சமூக வட்டத்தை விரிவாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள் திட்டம் ஒன்று நிறைவேறும். இன்று உங்களுக்கு நன்மை தரும் நாள். வீண் செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.
நல்ல மனசுக்கு சொந்தகாரர்களான ரிஷபராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு நேர்மறை எண்ணங்களால் அமையும். வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், முடிவுகள் நல்லதாகவே இருக்கும். வேலைத்தடைகள் விலகி ஓடும். உறவுகள், நட்புகள் வழியாக நன்மைகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறு சச்சரவும் இருக்கலாம். விட்டுக்கொடுத்து சென்றால் அமைதி கிடைக்கும். திருமண பேச்சுகள் முடிவுக்கு வரும்.
உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் மிதுன ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு சிறந்த முடிவுகளை எடுக்கும் திறமை பெருகும். முக்கிய சந்திப்புகள் வெற்றியை ஏற்படுத்தும். பண வரத்து மற்றும் நிதிநிலை சீராக இருக்கும். புதிய தொழில் மற்றும் வியாபார சிந்தனைகள் உருவாகும். குடும்பத்தில் ஒருமித்த ஆதரவு கிடைக்கும். பெற்றோர்கள் அறிவுரை வெற்றிக்கு வழிகாட்டும். முந்தைய கடன்கள் மற்றும் பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தாய் வழி சொந்தங்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள். சிலருக்கு காதல் கைகூடும்.
பொய்மை மற்றும் தீமைக்கு எதிராக குரல் கொடுக்கும் கடக ராசி நேயர்களே இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதால் அதனை பயன்படுத்திக்கொள்ளவும். அலைபாயும் மனநிலையை சமநிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய நாள். பணவிஷயங்களில் சிறு தடைகள் உண்டு, இருந்தாலும் திட்டமிட்டால் பணப்பிரச்சினையை தீர்க்கலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். ஆன்மிகத்தில் ஈடுபாடும், மன அமைதியும் கிடைக்கும். ஆலையங்களுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உருவாகும். பழைய நண்பரால் உதவி கிடைக்கும். தொலை தூரத்தில் இருந்து வரும் செய்திகள் மன மகிழ்ச்சியை தரும்.
ஊருக்கே வழிகாட்டும் திறன் படைத்த சிம்மராசி நேயர்களே இன்று உங்களுக்கு மிகச்சிறந்த நாள். இன்று உங்களுக்கு உங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பல நல்ல செய்திகள் வரும். தனி முயற்சி வெற்றி கனியை பறித்து தரும். தொழிலில் முக்கிய மாற்றங்கள் நிகழும். அரசியலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். கட்சி பதவிகளில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கனவன் மனைவி இடையே அன்பு பெருகும். திட்டமிட்டு செய்யும் காரியங்களும், திட்டமிடாமல் செய்யும் காரியங்களும் வெற்றியை கொடுக்கும். உறவினர்கள் நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள்.
சமூக நல பணிகளில் அக்கரை காட்டும் கன்னி ராசி நேயர்களே, இன்று சில புதிய சவால்களை எதிர்கொள்வீர்கள். ஆனால் உங்கள் திட்டமிடும் திறமை மூலம் அதனை வெற்றிகரமாக கையாள முடியும். வேலைவாய்ப்பில் நம்பிக்கையளிக்கும் மாற்றங்கள் கிடைக்கும். சிறு உறவுநெருக்கடிகளை தவிர்க்கும் எண்ணத்துடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. நண்பர்களுக்கு உதவும் சூழல் உருவாகும். நீண்ட நாள் கடன்கள் வசூலாகும். பண வரவு திருப்தியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 4
முதலீடு: சுகாதாரக் காப்பீடு
பரிகாரம்: விநாயகருக்கு அரக்கம்பூ பூஜிக்கவும்
தெய்வம்: விநாயகர்
நல்லது செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்க்கை நடத்தும் தூலாம் ராசி நேயர்களே இன்று உங்கள் யோசனைகள் சிறப்பாக அமையும். புதிய திட்டங்கள் வெற்றிக்கரமாக செயல்படும். இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்ள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடம் தொடர்பான ஒப்பந்தங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். காதலர்கள் இடையே ஏற்பட மனவருத்தம் முடிவுக்கு வரும். முக்கிய உறவினர்கள் உதவி செய்வர்.
நல்ல உள்ளம் படைத்த விருச்சிக ராசி நேயர்களே இன்று நீங்கள் முன்னேற்றத்தையும், சிரமத்தையும் ஒரே நாளில் அனுபவிப்பீர்கள். வேலைப்பளு அதிகரிக்கலாம். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளுங்கள். குடும்பத்தினரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். திடீர் பயணங்களில் லாபம் உண்டு. உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடு தேவை. வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் சர்ப்பிரைஸ் செய்திகளை கூறுவர்.
சுறுசுறுப்பாக செயல்படும் தனசு ராசி நேயர்கள் இன்று நீங்கள் துணிச்சலுடன் எடுக்கும் முடிவுகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்லும் நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பல மடங்கு அதிகரிக்கும். ஆன்மிக பயணத் திட்டம் தொடங்குவீர்கள். உறவினர்கள் வழியாக நன்மைகள் உண்டு.
ரகசியங்களை பாதுகாக்கும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் சீரான மாற்றங்களைக் கொண்டிருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் சில சிக்கல்கள் வந்தாலும், உங்கள் அனுபவத்தால் சமாளிக்க முடியும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் வரலாம். குடும்பத்தில் பழைய பிரச்சனைகள் தீரும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். உடல்நலத்தில் நலமுடன் இருப்பீர்கள். திரைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
யார் என்ன சொன்னாலும் மனதில் பட்டதை மட்டும் செய்யும் மனப்பான்மை கொண்ட கும்ப ராசி நேயர்களே இன்று உங்களக்கு திடீர் நன்மைகள் வந்து சேரும் நாள். பழைய கடன்கள் திரும்ப கிடைக்கும். குடும்பத்தில் பாசமும் அன்பும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்களிடமிருந்து நல்ல உதவி வரும். பயண திட்டம் தாமதமாகலாம். நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
நல்லதை மட்டுமே செய்யும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு உற்சாகம் அதிகமாக இருக்கும். உங்கள் முயற்சிகள் பலனளிக்கும். தொழில் வளர்ச்சி ஏற்படும். பெரியவர்கள் வலியுறுத்தும் ஆலோசனைகள் முக்கிய முடிவுகளை உருவாக்கும். பிள்ளைகளின் நடத்தை மகிழ்ச்சி தரும். ஆன்மிக நம்பிக்கை உயரும்.