Astrology: உண்மையாக காதலிக்கும் 4 ராசிக்காரர்கள்.! காதலுக்காக எதையும் தியாகம் செய்வாங்களாம்.!

Published : Nov 25, 2025, 10:55 AM IST

4 zodiac signs that truly love: குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் காதலில் மிகவும் உண்மையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பார்களாம். அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் ராசிகள்

காதல் என்பது இரண்டு மனங்களின் சங்கமம் ஆகும். அதில் உண்மை, விசுவாசம் மற்றும் நம்பிக்கை ஆகிய மூன்றும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே காதலில் மிகுந்த ஈடுபாடும், அசைக்க முடியாத உண்மையை வெளிப்படுத்துபவர்களாகவும் இருப்பார்களாம். இவர்கள் தங்கள் துணையின் மீது வைக்கும் அன்பு மிகவும் உறுதியானதாக இருக்கும். அத்தகைய ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
ரிஷபம்
  • ரிஷப ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். சுக்கிர பகவான் காதல், அழகு மற்றும் ஆடம்பரத்திற்குரியவர். இதன் காரணமாக ரிஷப ராசிக்காரர்கள் இயல்பாகவே அன்பை ரசிப்பவர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். 
  • ரிஷபம் என்பது நில ராசியாகும். இது அவர்களின் உறவுகளில் ஸ்திரத்தன்மையையும், உறுதியையும் குறிக்கிறது. இவர்கள் ஒரு முறை காதலித்து விட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். 
  • இவர்களின் காதல் எந்தவித சுயநலமும் இல்லாமல் தூய்மையானதாகவும், ஆழமானதாகவும் இருக்கும். தங்கள் துணையுடன் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். 
  • கடினமான நேரங்களில் கூட காதலருக்கு ஆதரவாகவும், பக்கபலமாகவும் நிற்பார்கள்.
35
கடகம்
  • கடக ராசியை ஆளும் கிரகம் சந்திரன். சந்திரன் உணர்ச்சிகள், தாய்மை உணர்வு, உள்ளுணர்வு ஆகியவற்றின் காரகராவர். இதுவே கடக ராசிக்காரர்களை மிகுந்த பாசமுள்ளவர்களாகவும், உணர்ச்சிப் பூர்வமானவர்களாகவும் மாற்றுகிறது. 
  • கடக ராசிக்காரர்கள் பாசத்தால் நிரம்பிய மனம் கொண்டவர்கள். இவர்களின் காதல் என்பது ஆழமான உணர்வு பிணைப்பைக் கொண்டது. இவர்கள் தங்கள் துணையையும், குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதை முதன்மை இலக்காக கருதுகின்றனர். 
  • தங்கள் காதலர்கள் ஒருபோதும் காயப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். காதலுக்காக எதையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். 
  • ஒருவரை காதலித்து விட்டால் அவருக்காக தங்கள் வாழ்க்கையே அர்ப்பணிக்க கூடிய மனப்பான்மை கொண்டவர்களாக விளங்குவார்கள்.
45
கன்னி
  • கன்னி ராசியை புதன் பகவான் ஆள்கிறார். கன்னி ராசிக்காரர்கள் மிகுந்த அறிவாளிகள், பகுத்தறிவாளிகள், நடைமுறை சிந்தனையுடன் செயல்படுபவர்கள். இவர்கள் காதலில் உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பார்கள். 
  • கன்னி ராசிக்காரர்கள் தங்கள் காதலை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதை விட செயல்களின் மூலம் வெளிப்படுத்துவார்கள். தங்கள் துணையின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்றபடி உதவுவார்கள். 
  • இவர்கள் ஒரு உறவில் ஈடுபட்டால் அதில் நேர்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பார்கள். ஒரு முறை நம்பிக்கை வைத்து விட்டால் அதை கடைசி வரை காப்பாற்றுவார்கள். தங்கள் துணையின் வெற்றிக்காக தங்களின் கடின உழைப்பையும் வழங்குவார்கள். 
  • வாழ்க்கைத் துணையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பார்கள். அற்ப விஷயங்களுக்காக சண்டையிட மாட்டார்கள்.
55
மீனம்
  • மீன ராசியை குரு பகவான் ஆள்கிறார். மீனம் என்பது நீர் ராசியாகும். இது மீன ராசியினரின் காதலின் ஆழத்தையும், கருணையும் பிரதிபலிக்கிறது. மீன ராசிக்காரர்கள் மிகவும் ரொமான்டிக் இதயம் கொண்டவர்கள். 
  • இவர்களின் காதல் என்பது ஆழமாகவும், ஒரு கனவு உலக காதலைப் போலவும் இருக்கும். காதலில் இவர்கள் மிகுந்த பரிவு, புரிதல் மற்றும் தியாக உணர்ச்சியை காட்டுவார்கள். 
  • தங்கள் துணையின் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். ஒருவரை காதலித்து விட்டால் இவர்களின் காதல் நிபந்தனையற்றதாகவும், நிரந்தரமானதாகவும் இருக்கும். 
  • தங்கள் துணையுடன் ஒரு ஆழமான, அதேசமயம் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை வெளிப்படுத்துவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories