மீன ராசி நேயர்களே, இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகள் எதிர்காலத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். வேலை மற்றும் குடும்பத்தில் ஒரு விதமான மன நிறைவு, அமைதி நிலவும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். சவால்களை சந்திக்க தேவையான தைரியம் அதிகரிக்கும்.
நிதி நிலைமை:
இந்த வாரத்தின் இறுதியில் லாபங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. திடீர் செலவுகள் அல்லது எதிர்பாராத இழப்புகளுக்கு வாய்ப்பு உள்ளதால் பண விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். உங்கள் சேமிப்பை அதிகரிக்க செலவுகளை முதலில் கட்டுப்படுத்துங்கள். சிக்கனமாக செயல்படுங்கள். தொழில் ரீதியாக அல்லது வேறு வழியில் நிதி உதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்:
நீண்டகாலமாக இருந்த ஆரோக்கியப் பிரச்சனைகள் முடிவிற்கு வரும் அல்லது ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். ஆரம்பத்தில் கவனம் செலுத்துவது அவசியம். ஆரோக்கியமான உணவு முறை மற்றும் ஒழுங்கான உடற்பயிற்சி ஆகியவற்றைக் கடைபிடிப்பது நல்லது.
கல்வி:
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். உயர் கல்வி மற்றும் எதிர்கால கல்வி தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். கல்விக்கான எதிர்கால திட்டங்களை வகுப்பீர்கள். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும், பலன்களும் கிடைக்கும். அலுவலகத்தில் முக்கிய பணிகளை கையாளும் பொழுது பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் மகிழ்ச்சி, இனிமை மற்றும் அமைதி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேசுவதும், கோபத்தைக் குறைப்பதும் நன்மை தரும்.
பரிகாரம்:
தினமும் எழுந்தவுடன் சூரியக் பகவானுக்கு நீர் சமர்ப்பித்து வழிபடுவது நன்மை தரும். குலதெய்வத்தை பிரார்த்திப்பது கூடுதல் நன்மைகளை ஏற்படுத்தும் பொருளாதார நிலையை வலுப்படுத்த மகாலட்சுமி தாயாரை வழிபடுங்கள். இயலாதவர்கள், ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)