மகர ராசி நேயர்களே, உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும் வாரமாக இருக்கும். பொறுமையுடன் செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும். அடுத்தவரின் செயல்பாடுகள் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். மனதில் சஞ்சலம் இருந்தாலும் அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம்.
நிதி நிலைமை:
குடும்ப செலவுகளை சமாளிப்பதற்கு தேவையான பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால் வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கும். அதிக செலவிற்கும் வாய்ப்பு இருப்பதால் அனாவசிய செலவுகளில் கவனம் தேவை. சொத்துக்கள் மூலமும் அல்லது பிற வழிகளில் மூலவும் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆரோக்கியம்:
ராகு பகவானின் சாதகமற்ற நிலை காரணமாக உணவுப் பழக்க வழக்கங்களில் மிக கவனம் தேவை. உணவு விஷமாவது அல்லது செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கண் சார்ந்த பிரச்சினைகள் வரலாம். எனவே கண்ணுக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம். மன அழுத்தத்தை குறைத்து, தியானம், உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
கல்வி:
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி மனப்பான்மை குறையும். வெற்றி பெறுவதற்கு கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லதுழ சக மாணவர்களுடன் இணைந்து படிப்பது நல்ல மதிப்பெண்கள் பெற உதவும். உயர் கல்வி அல்லது வெளிநாட்டு கல்வி தொடர்பான முயற்சிகளுக்கு நல்ல காலமாகும். தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் பொழுது அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும். மேலதிகாரிகளால் பாராட்டு அல்லது வெகுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின் ஆதரவு நன்மையைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பால் வருமானம் கணிசமாக உயரும். மருந்து ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம்.
குடும்ப உறவுகள்:
குரு பகவானின் நிலை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு ஆறுதலைத் தரும். குடும்ப பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காண்பது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத் துணை மூலம் மகிழ்ச்சியும் ஆதரவும் கிடைக்கும்.
பரிகாரம்:
இந்த வாரம் ஏதாவது ஒரு தினத்தில் வராஹி தேவியை வழிபடுவது நல்லது. வராஹி தேவிக்கு மலர்கள் சமர்ப்பித்து நெய் தீபம் ஏற்றி வழிபடுவது எதிர்மறை ஆற்றல்களை விலக்கி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது பலன்களைக் கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)