விருச்சிக ராசி நேயர்களே, செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் அதிக ஆற்றலும், உற்சாகமும் கிடைக்கும். எந்த ஒரு வேலையிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு வெற்றியை ருசிப்பீர்கள்.
சூரியன் விருச்சிக ராசியில் இருப்பதால் செல்வாக்கு மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் யோசனைகளை ஏற்று மற்றவர்கள் செயல்படுவார்கள். இழுபறியில் இருந்த வேலைகள் அனைத்தையும் முடிப்பதற்கான மன உறுதியைப் பெறுவீர்கள்.
நிதி நிலைமை:
நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதி ஆதாயமும் சிலருக்கு சொத்துக்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும்.
புதன் பகவானின் சஞ்சாரம் காரணமாக எதிர்பாராத பயணச் செலவுகள் அல்லது முதலீடுகளில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். எதையும் திட்டமிட்டு செய்வது எதிர்காலத்திற்கு நல்லது.
ஆரோக்கியம்:
இந்த வாரம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் செவ்வாய் பகவானின் நிலை காரணமாக உடல் சூடு, கோபம் அல்லது சிறிய காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாயார் உடல் நலனில் தனி கவனம் தேவை. மன அழுத்தத்தை குறைக்க கோயில் அல்லது தியான மண்டபங்களில் அமர்ந்து தியானம் செய்வது நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க உதவும்.
கல்வி:
பிள்ளைகளின் கல்வி விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகி, முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறும். போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரம்:
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் மன நிறைவு மிக்க வாரமாக இருக்கும். மேல் அதிகாரிகளால் பாராட்டுக்கள் அல்லது பரிசுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி பெறும் சாத்தியமண்டு. புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறிச் செல்வீர்கள். கலை, ஊடகம், அழகுத் துறைகளில் இருப்பவர்களுக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்கும்.
குடும்ப உறவுகள்:
கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தந்தை மற்றும் மூத்தவர்களின் ஆதரவும், ஆசிகளும் கிடைக்கும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
பரிகாரம்:
இந்த வாரம் அனுமனை வழிபடுவது நேர்மறை பலன்களை அதிகரிக்கும். தினமும் அனுமன் ஆலயங்களுக்கு சென்று வெண்ணெய் காப்பிட்டு, வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டு வரலாம். ஏழை நபர்களுக்கு உணவு தானம் அல்லது உடைதானம் செய்வது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வழியை ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)