Weekly Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, சுக்கிர பகவானால் இந்த வாரம் இத்தனை நன்மைகள் கிடைக்கும்.!

Published : Nov 24, 2025, 12:28 PM IST

Thulam Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
வார ராசிப்பலன்கள் - துலாம்

துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் குழப்பமான முடிவுகளில் இருந்து விடுபட்டு துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்குரிய பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். 

சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். குடும்பத்திலும், வெளியிடத்திலும் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்கான அனுகூலமான காலகட்டமாக இருக்கும்.

நிதி நிலைமை:

பண வரவு சீராக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த வழிகளில் இருந்து பண ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி திட்டமிடல் மற்றும் சிக்கனமான நடவடிக்கைகள் முக்கியம். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் பலனைத் தரலாம். குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக பிள்ளைகள் மூலம் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. வேலைக்குப்பளு காரணமாக நேரம் தவறி உண்ண நேரலாம். இதன் காரணமாக வயிறு தொடர்பான கோளாறுகள் வரலாம். எனவே கவனம் தேவை. பரம்பரை நோய் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

கல்வி:

மாணவர்களுக்கு இது மிகவும் நல்ல நேரமாகும். கல்வி தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது வெற்றிக்கு உதவும். கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பதன் மூலம் வெற்றியை உறுதி செய்யலாம்.

தொழில் மற்றும் வியாபாரம்:

தொழில் மற்றும் வணிகத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் ஏராளமாக கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கும். குழுவாக பணி செய்வதன் மூலம் வெற்றி பெறுவீர்கள்.

 உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் கிடைப்பதால் லாபம் அதிகரிக்கும்.

குடும்ப உறவுகள்:

குடும்பத்தில் பிணைப்பு அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணை அனைத்து விஷயங்களுக்கும் ஆதரவாக இருப்பார். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த குழப்பங்கள், பிரச்சனைகள் தீரும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்தியைக் கேட்பீர்கள். 

தனிமையில் இருப்பவர்களுக்கு துணையை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. தம்பதிகளுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேசிக் தீர்ப்பது நல்லது.

பரிகாரம்:

இந்த வாரத்தில் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் தீர விநாயகப் பெருமான வழிபடுங்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி தீபமேற்றி வழிபட காரியங்களில் ஏற்படும் தடைகள் விலகும். முதியவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நேர்மறை பலன்களைக் கூட்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories