Chaturgrahi yog 3 lucky zodiac signs: ஜோதிடத்தின்படி டிசம்பர் மாதம் 4 முக்கிய கிரகங்கள் குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசியில் இணைய இருக்கின்றன. அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
டிசம்பர் 2025 ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் பல கிரக பெயர்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. குறிப்பாக குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசியில் நான்கு சுப கிரகங்கள் குடியேற இருக்கின்றன. டிசம்பர் 7ஆம் தேதி செவ்வாய் பகவான் தனுசு ராசிக்குள் நுழைகிறார். டிசம்பர் 16ஆம் தேதி சூரிய பகவானும், டிசம்பர் 20ஆம் தேதி சுக்கிர பகவானும், மாத இறுதியில் டிசம்பர் 29ஆம் தேதி புதன் பகவானும் தனுசு ராசிக்குள் நுழைகின்றனர். நான்கு சுப கிரகங்கள் ஒரே ராசியில் இணைவது மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
25
டிசம்பரில் உருவாகும் பிற யோகங்கள்
தனுசு ராசியில் இந்த கிரகங்களின் சஞ்சாரம் இரண்டு ராஜ யோகங்களை உருவாக்குகிறது. சூரியன் மற்றும் புதன் இருவரும் இணைந்து புதாதித்ய ராஜயோகத்தையும், செவ்வாய் மற்றும் சூரியன் ஆதித்ய மங்கள ராஜயோகத்தையும் உருவாக்குகின்றனர். மேலும் 4 கிரகங்கள் ஒன்றாக இணையும் போது சதுர்கிரக ராஜயோகமும் உருவாகிறது. இதன் காரணமாக 12 ராசிக்காரர்களுக்கும் நன்மைகள் கிடைக்க உள்ளது. இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
35
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சதுர்கிரக யோகம் பல வழிகளில் நன்மை பயக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
வீட்டில் தடைபட்டு நின்ற சுப காரியங்கள் நடக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அளவில்லாத மகிழ்ச்சி நிலவும். செல்வம், பதவி, கௌரவம் அதிகரிக்கும். மாணவர்களுக்கும் இது நல்ல நேரமாகும்.
கடினமாக உழைப்பவர்கள் அதற்கான பலனை அறுவடை செய்வீர்கள். வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் சாதகமான மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கலாம். நிதி ரீதியாக வலுவடைவீர்கள்.
தனுசு ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் இந்த கிரகங்களின் சேர்க்கை நடைபெற இருப்பதால், தனுசு ராசிக்காரர்கள் சுப பலன்களை அனுபவிப்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை, தைரியம், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்கால திட்டங்கள் வெற்றி பெறும்.
உங்களின் பதவி மற்றும் ஆளுமையின் செல்வாக்கு அதிகரிக்கும். திடீர் பண வரவுக்கான வாய்ப்புக்கள் உண்டு. அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது திடீர் பண ஆதாயத்திற்கான வழிகள் பிறக்கும்.
வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அல்லது பதவிகளில் மாற்றம் ஏற்படலாம்.
55
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சதுர்கிரக ராஜயோகம், செல்வத்தையும் தொழிலில் வெற்றியையும் தரவுள்ளது. வாழ்க்கையில் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வந்தவர்கள் முன்னேற்றத்தைப் பெற உள்ளனர். கடினமாக உழைத்தவர்களுக்கு அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும்.
புதிய பொறுப்புகள் வழங்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டுக்களையும், நல்ல சலுகைகளையும் பெற வாய்ப்பு உள்ளது.
புதிய முதலீடுகள் மூலம் லாபத்தைப் பெறுவீர்கள். சொத்துக்கள் சேர்க்கும் வாய்ப்புகள் உருவாகும். தொழிலில் மேன்மை, வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)