zodiac signs never admit mistakes: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்தவர்கள், “தான் சொல்வது தான் சரி” என்றும், “தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்” என்கிற மனோபாவத்திலும் இருப்பார்களாம். அத்தகைய ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
“தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்” என்பது ஒருவரது பிடிவாதமான மனநிலையாகும். தான் நம்பியது தவறாக இருந்தாலும், அதை உறுதியாக பற்றிக்கொள்ளும் தன்மையை குறிக்கும் பிரபலமான தமிழ் பழமொழி ஆகும். தன்னுடைய கருத்து தான் சரி என்றும், தான் செய்த செயலே சரியானது என்றும், கடைசிவரை விட்டுக் கொடுக்காத குணத்தை இது குறிக்கிறது. ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு இந்த பிடிவாத குணம் சற்று அதிகமாகவே இருக்கும். அவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? அதற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
25
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் நிலையான தன்மை கொண்டவர்கள். இவர்கள் இயல்பிலேயே உறுதியானவர்கள். எதையும் நிதானமாக சிந்தித்து முடிவெடுப்பார்கள்.
இவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் அதை மாற்றிக் கொள்ள உலகமே திரண்டு வந்தாலும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள். இது அவர்களுடைய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடாகும்.
இவர்கள் தங்கள் வாழ்க்கையில் அமைதியையும், நிலைத்தன்மையையும் விரும்புகிறார்கள். எனவே மாற்றங்களை ஏற்க தயங்குகிறார்கள். ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டால் அதுவே சரியாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.
இந்த குணம் இவர்களை மிகவும் நம்பகமானவர்களாகவும், இலக்கை அடையும் வரை போராடும் நபர்களாகவும் மாற்றுகிறது.
35
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தலைமைப் பண்பு, கம்பீரம் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். தங்கள் முடிவுகள் எப்போதுமே சரியாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறார்கள்.
ஒரு முடிவை எடுத்து அதை செயல்படுத்திய பின்னர் அது தவறு என ஒப்புக்கொள்வது அவர்களின் கௌரவத்திற்கு குந்தகம் விளைவிப்பதாக உணர்கிறார்கள்.
தான் சொல்வது தவறு என தெரிந்தாலும் தங்கள் அந்தஸ்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பிடிவாதம் பிடிப்பார்கள். “தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்” என சொல்வது இவர்களின் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காகவே ஆகும்.
இவர்களின் இந்த பிடிவாத குணம் இவர்களை சிறந்த தலைவர்களாகவும், லட்சியங்களுக்காக போராடுபவர்களாகவும் மாற்றுகிறது.
விருச்சிக ராசிக்காரர்கள் ஆழ்ந்த, தீவிரமான மற்றும் மர்மமான குணம் கொண்டவர்கள். இவர்கள் மிகுந்த உள்ளுணர்வை கொண்டவர்கள். இவர்களின் பிடிவாதம் உணர்ச்சிப்பூர்வமானது.
ஒரு விஷயத்தைப் பற்றி நீண்ட நேரம் ஆராய்ச்சி செய்த பின்னரே முடிவை எடுப்பார்கள். அதன் பிறகு யாரேனும் தவறு என நிருபிக்க முயற்சித்தால் அது தங்களுக்கு ஏற்படும் மரியாதை குறைவாக கருதுகிறார்கள்.
விட்டுக் கொடுக்காத இந்த குணம் இவர்களின் ஆழமான உறுதிப்பாட்டை காட்டுகிறது. ஒருமுறை அவர்கள் ஒருவர் மீதுள்ள நம்பிக்கை மாறினால் அதை மாற்றிக் கொள்வது மிகவும் கடினம்.
இவர்களின் இந்த தீவிர உள்ளுணர்வு அவர்களை சிறந்த ஆராய்ச்சியாளர்களாகவும், உறுதியான நண்பர்களாகவும் மாற்றுகிறது.
55
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் புதுமையான சிந்தனை கொண்டவர்கள். சுதந்திரம் மற்றும் அறிவுபூர்வமான நிலைப்பாடு கொண்டவர்கள். அவர்கள் தர்க்கரீதியான விமர்சனங்கள் மற்றும் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஒரு முடிவை எடுத்தால் அது விதிகளுக்கு முரணாக இருந்தாலும் தங்கள் முடிவே சரியானது என்று நம்புவார்கள். தங்களின் தனித்துவமான கண்ணோட்டத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்க மாட்டார்கள்.
ஒரு கருத்து தவறு என்று இவர்களிடம் வாதிக்க முயற்சித்தால் என் அறிவுக்கு எட்டியபடி நான் செய்தது சரியே என்று வாதிடுவார்கள்.
இவர்களின் தனித்துவமான இந்த குணம் சமூக சீர்திருத்தவாதிகளாகவும், புதிய கண்டுபிடிப்பாளர்களாகவும் உருவாக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)