கும்ப ராசி நேயர்களே, சூரிய பகவான் பத்தாம் வீடான தொழிற் ஸ்தானத்தில் இருப்பதால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் ஏற்றம் கிடைக்கும். சனி பகவான் நேரடியாக பயணிக்க இருப்பதால் காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
நீண்ட கால இலக்குகளை நோக்கி உறுதியாக செயல்படுவீர்கள். உங்களை வாட்டி வதைத்து வந்த கஷ்டங்கள், சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும் காலகட்டமாகும்.
நிதி நிலைமை:
இந்த மாதம் திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத காண வரவும் உண்டாக வாய்ப்பு உள்ளது. தடைகள் தகர்த்து வெற்றியைப் பெறுவீர்கள். உறுதியான முடிவுகளை எடுத்து பாராட்டுகளை குறிப்பீர்கள். சிறந்த நிதி ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் அனைத்தும் தீரும். திட்டமிட்டு முதலீடு செய்ய நல்ல வாரம் ஆகும். வார இறுதியில் புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் மேம்படும். மனசோர்வு நீங்கி, புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். அடிவயிறு, கால், பாதம், முதுகு தொடர்பான பாதிப்பு இருக்கவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். திரையில் நீளம் செலவிடுவதை குறைக்க வேண்டும். மனரீதியான சோர்வைத் தவிர்க்க தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபடலாம்.
கல்வி:
மாணவர்கள் இந்த வாரம் சிறப்பான முன்னேற்றத்தைக் கொடுக்கும். கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களின் கனவு நனவாகும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
தொழில் ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் இந்த வாரம் தொழிலில் மிகச்சிறந்த வெற்றியும், அங்கீகாரமும் உண்டாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கலாம். மேல் அதிகாரிகளால் பாராட்டுக்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழில் போட்டியாளர்கள் மற்றும் எதிரிகள் சதியை முறியடிப்பீர்கள். இந்த வாரத்தில் தொழிலை விரிவுப்படுத்தவோ, புதிய முதலீடு செய்வதோ வேண்டாம்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்களின் செயல்கள் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். குழந்தைகள் மூலம் சுப செய்திகள் கிடைக்கலாம்.
பரிகாரம்:
இந்த வாரம் ஐயப்ப சுவாமியை வழிபடுவது நல்லது. யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உணவு தானம் அளிப்பது தடைகளில் இருந்து நிவர்த்தி அளிக்கும். முருகன், துர்க்கை தெய்வங்களை வழிபடுவது தொழிலில் ஏற்றத்தைத் தரும். மாலையில் சனி ஸ்தோத்திரம் சொல்வது நன்மை பயக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)