Astrology: சனி பகவானில் வீட்டில் ஒன்று சேரும் நண்பர்கள்.! 2026 முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்கும்.!

Published : Nov 25, 2025, 10:09 AM IST

Trigrahi Rajyog 2026 list of lucky zodiac signs: வேத நாட்காட்டியின்படி, 2026 துவக்கத்தில் மகர ராசியில் சக்தி வாய்ந்த திரிகிரஹி யோகம் உருவாகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்க உள்ளது. 

PREV
14
திரிகிரஹி யோகம் 2026

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல சுப யோகங்களும் ராஜயோகங்களும் உருவாக உள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியில் வலுவான திரிகிரஹி யோகம் ஏற்படும். இந்த யோகம் கிரகங்களின் ராஜாவான சூரியன், ஆடம்பரத்தை தரும் சுக்கிரன் மற்றும் வியாபாரத்தை அளிக்கும் புதன் ஆகியோரின் இணைவால் உருவாகிறது. 

இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. மேலும், இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு புதிய வேலையும், அபரிமிதமான செல்வமும் கிடைக்கும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
மேஷம்

திரிகிரஹி யோகம் மேஷ ராசியின் பத்தாம் வீடான தொழில் மற்றும் வணிக ஸ்தானத்தில் உருவாகுவதால், இந்த யோகம் உங்களுக்கு நல்லதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அனுபவிக்க முடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கக்கூடும். திடீர் நிதி ஆதாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலில் எதிர்பார்த்து காத்திருந்த புதிய ஒப்பந்தங்கள் அல்லது ஆர்டர்கள் கைக்கு கிடைக்கும்.

34
தனுசு

தனுசு ராசிக்கு திரிகிரஹி யோகம் உருவாவது நேர்மறை பலன்களை அதிகரிக்கும். இந்த யோகம் உங்கள் ராசியின் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் உருவாகும் என்பதால், இந்த காலகட்டத்தில் எதிர்பாராத நிதி ஆதாயங்களை அனுபவிக்கலாம். தொழில் செய்து வருபவர்கள் இந்த நேரத்தில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். மேலும் அனைத்து வகையான சவால்களையும் புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு வெற்றியைப் பெற முடியும். குடும்பத்திலும் சமூகத்திலும் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும்.

44
மீனம்

திரிகிரஹி யோகம் மீன ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இந்த யோகம் மீன ராசியின் வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் உருவாகிறது. எனவே, இந்த காலக்கட்டத்தில் உங்கள் வருமானம் கணிசமாக அதிகரிக்கக்கூடும். புதிய வருமான ஆதாரங்கள் மூலமும் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த சூழல் உருவாகும். நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலமும் லாபம் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories