Astrology: இந்த 3 ராசிகள் நவராத்திரிக்குப் பின் கஷ்டங்களையும், பணப் பிரச்சனைகளையும் சந்திக்கப் போறீங்க.! கவனமா இருங்க.!

Published : Sep 17, 2025, 02:05 PM ISTUpdated : Sep 17, 2025, 02:06 PM IST

After navratri 3 zodiac signs should be careful : நவராத்திரிக்கு பின்னர் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் விஷ யோகம் உருவாக உள்ளது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அல்லது நிதி இழப்புகள் ஏற்படலாம். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
நவராத்திரிக்குப் பின் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22 துவங்கி அக்டோபர் 2 வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி முடிந்த பிறகு சந்திர பகவான் சனி பகவானுடன் இணைவதன் காரணமாக விஷ யோகம் உருவாகிறது. சனி பகவான் ஜோதிடத்தின்படி நீதிமான் மற்றும் கர்மத்தின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனிபகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். சந்திரன் தனது நிலையை வேகமாக மாற்றும் ஒரு கிரகம் ஆகும். இரண்டு எதிரி இயல்புகளைக் கொண்ட இந்த கிரகங்களின் சேர்க்கை அசுப விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. நவராத்திரிக்குப் பின்னர் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் நவராத்திரிக்கு பின்னர் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். மேஷ ராசியின் 12 ஆம் வீட்டில் விஷ யோகம் உருவாக உள்ளது. இது இந்த ராசிக்காரர்களின் நிதி வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் அக்டோபர் மாதத்தில் திடீர் பண இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி நெருக்கடிகள் உருவாகலாம். பணம் சம்பாதிப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற பயம், பதட்டம், மன அமைதியின்மை ஏற்படலாம். குடும்பத்தில் பிரச்சினைகள் உண்டாகலாம். கடினமாக உழைத்த பின்னரும் அதன் பலன்களை அனுபவிக்க முடியாமல் போகலாம். இந்த நேரத்தில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.

34
கும்பம்

விஷ யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கும் அசுப பலன்களைத் தர இருக்கிறது. கும்ப ராசியின் இரண்டாவது வீட்டில் இந்த விஷ யோகம் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலையை எடுத்தாலும் அதை அதில் தடைகள் ஏற்படலாம். வேலைகள் முழுமை அடையாது. இதன் காரணமாக மன அழுத்தம், மன அமைதியின்மை நிம்மதி குறைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. செய்து முடித்த வேலையில் இருந்து பணம் சம்பாதிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளலாம். எனவே பொறுமையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும். மேலும் தொழிலில் போட்டியாளர்கள், எதிரிகள் பெருகலாம். எதிரிகளின் அச்சுறுத்தலும் அதிகரிக்கலாம்.

44
மீனம்

மீன ராசிக்காரர்கள் நவராத்திரிக்கு பிறகு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் அசுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மீன ராசிக்காரர்களின் முதல் வீட்டில் விஷ யோகம் ஏற்படும். சனிபகவான் மீனத்தில் சஞ்சரித்து வரும் நிலையில், அக்டோபர் 6 ஆம் தேதி சந்திரனும் மீன ராசியில் இணைகிறார். இதன் காரணமாக திடீர் நிதி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கையில் நிதி ஸ்திரத்தன்மை குறையக்கூடும். பல்வேறு நிதி தொடர்பான சிக்கல்களை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனெனில் பணம் சார்ந்த விஷயங்களில் கருத்து வேறுபாடுகள், பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories