நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஆழமான சிந்தனை கொண்டவர்கள் மற்றும் உணர்வுகளை மறைத்து வைப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் உள் உணர்வு சொல்வதை கேட்பதால் மற்றவர்களின் தேவைகளை புறக்கணிப்பதாக தோன்றலாம். இவர்களின் மர்மமான இயல்பு சிலருக்கு சுயநலமாக தெரியலாம். ஆனால் அவர்கள் தங்கள் உள்ளுணர்வை மதிக்கும் பண்பு காரணமாக இவர்கள் சுயநலவாதிகளாக பிறருக்கு வெளிப்படுகின்றனர்.
செயல்களால் தீர்மானியுங்கள்
மேற்கூறிய மாதங்களில் பிறந்தவர்கள் சில சமயங்களில் சுயநலவாதிகளாக தோன்றினாலும், இது அவர்களின் ஆளுமையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பண்புகள் உள்ளன. மற்றவர்களுடன் புரிதலுடன் பழகுவது அனைவருக்கும் நன்மை தரும். ஒருவரின் உண்மையான குணம் என்பது அவர்களின் செயல்களால் தான் தீர்மானிக்கப்படுகிறதே தவிர அவர்கள் பிறந்த மாதங்களை அடிப்படையாகக் கொண்டு அல்ல.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)