FIFA World Cup 2022: கடும் கட்டுப்பாடுகளால் கடுப்பான ரசிகர்கள்! காசு கொடுத்து போலியாக கூட்டம் சேர்த்த கத்தார்?

By karthikeyan V  |  First Published Nov 22, 2022, 8:24 PM IST

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடக்க விழாவை காண, கத்தாரில் வேலை பார்க்கும் புலம்பெயர் தொழிலார்களுக்கு பணம் கொடுத்து வரவழைத்து, பல நாட்டு ரசிகர்களும் ஸ்டேடியத்தில் குவிந்ததை போன்ற தோற்றத்தை கத்தார் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 


ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்படும் விளையாட்டு தொடர். கால்பந்து விளையாட்டுக்குத்தான் உலகளவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் ரசிகர்களால் திருவிழாவை போல கொண்டாடப்படும். 

ஆனால் ரசிகர்களின் கொண்டாட்ட மனநிலையில் மண்ணை அள்ளிப்போட்டது கத்தார். 22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை கத்தாரில் நடந்துவருகிறது. கத்தாரில் உலக கோப்பை நடப்பதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தன. 

Tap to resize

Latest Videos

undefined

FIFA World Cup 2022:செமயா ஆடிய சவுதி அரேபியா.. மெஸ்ஸியை தவிர யாருமே கோல் அடிக்கல! அர்ஜெண்டினா அதிர்ச்சி தோல்வி

ஃபிஃபா உலக கோப்பை கத்தாரில் 8 ஸ்டேடியங்களில் நடத்தப்படுகின்றன. 32 நாடுகள் கலந்துகொண்டு ஆடிவருகின்றன. ஐரோப்பிய, அமெரிக்க, ஆஃப்ரிக்க நாட்டு அணிகள் தான் பெரும்பாலானவை. அவர்கள் எல்லாம் கொண்டாட்ட மனநிலையில் போட்டிகளை பார்க்க ஸ்டேடியங்களுக்கு வருபவர்கள். 

அப்படியிருக்கையில், ஃபிஃபா உலக கோப்பை போட்டிகளை காண ஸ்டேடியங்களுக்கு வரும் ரசிகர்களுக்கு கத்தார் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஸ்டேடியங்களில் மது அருந்த தடை, ஸ்டேடியங்களின் சுற்று வட்டாரப்பகுதிகளில் மது விற்பனைக்கு தடை, மது அருந்திவிட்டும் வரக்கூடாது, கொண்டாட்டத்திற்கான இசை கருவிகளுக்கும் அனுமதி இல்லை என்று கட்டுப்பாடுகளை விதித்தது கத்தார்.

பெண்கள் கண்ணியமான உடைகளை அணிந்துவரவேண்டும், உடல் அங்கம் தெரியும் வகையில் உடை அணியக்கூடாது, டாட்டூ தெரியுமாறு உடை அணியக்கூடாது என்று பெண்களுக்கு உடையில் கட்டுப்பாடுகளை விதித்தது. சூடான வானிலையை கொண்ட கத்தாரில் இப்படியான கட்டுப்பாடுகளை விதித்தால் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் ரசிகர், ரசிகைகள் எப்படி உலக கோப்பையை காண கத்தாருக்கு வருவார்கள்..? கத்தாரின் கடும் கட்டுப்பாடுகளால் வெளிநாட்டு ரசிகர்கள் போட்டிகளை நேரில் காண கத்தாருக்கு வருவதில் ஆர்வம் காட்டவில்லை.

ஆனாலும் அல் பைட் ஸ்டேடியத்தில் நடந்த ஃபிஃபா உலக கோப்பை தொடக்க விழாவில் பல நாட்டு அணிகளின் ஜெர்சிகளை அணிந்துகொண்டு ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர்கள் எல்லாம் உண்மையாகவே அந்தந்த நாடுகளின் ரசிகர்கள் இல்லை. வெளிநாட்டு ரசிகர், ரசிகைகளின் வருகை குறைவாக இருந்ததால், இந்தியா, வங்கதேசம், நேபாளம், ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வேலைக்காக கத்தார் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காசு கொடுத்து பல நாட்டு ஜெர்சிகளை அணியவைத்து, கால்பந்து ரசிகர்கள் போல கூட்டம் சேர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

6000 தொழிலாளர்களை காவு வாங்கிய ஃபிஃபா உலக கோப்பை.. கத்தாரில் நடந்த கொடுமை

அப்படியும் கூட பெண் ரசிகைகளின் எண்ணிக்கை வெகு குறைவு. கால்பந்து விளையாட்டுக்கு பெண் ரசிகைகள் அதிகம்தான். ஆனால் கத்தாரின் கடும் கட்டுப்பாடுகளால் பெண் ரசிகைகள் கத்தாரில் கால்பந்து போட்டிகளை காண ஆர்வம் காட்டவில்லை. கத்தாரில் கால்பந்து உலக கோப்பையை காண கூட்டம் கூடவில்லை; கூட்டப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!