ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் சவுதி அரேபியாவிற்கு எதிரான போட்டியில் முதல் கோலை அடித்து இந்த உலக கோப்பை தனது கோல் கணக்கை தொடங்கினார் அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் கத்தாரை வீழ்த்தி ஈகுவடார் அணி வெற்றி பெற்றது. நேற்று நடந்த 2 போட்டிகளில் ஈரானை வீழ்த்தி இங்கிலாந்தும், செனகலை வீழ்த்தி நெதர்லாந்தும் வெற்றி பெற்றன.
இன்று 3 போட்டிகள் நடக்கின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் க்ரூப் சி-யில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினாவும் சவுதி அரேபியாவும் ஆடிவருகின்றன.
undefined
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை: ஈரானை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், சவுதிக்கு எதிரான ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை அடித்து இந்த உலக கோப்பையில் தனது கோல் கணக்கை தொடங்கினார் லியோனல் மெஸ்ஸி.
இந்த உலக கோப்பையை அர்ஜெண்டினாவுக்கு வென்று கொடுப்பார் என்று சர்வதேச அளவில் மெஸ்ஸியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்க, மெஸ்ஸி முதல் கோலை அடித்ததும் அரங்கமே அதிர்ந்தது.