ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் ஈரானை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கி நடந்துவருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் கத்தாரும் ஈகுவடாரும் மோதின. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஈகுவடார் அணி 2-0 என்ற கோல்கணக்கில் கத்தாரை வீழ்த்தி வெற்றி பெற்றது.
உலக கோப்பையின் 2வது நாளான இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடந்த முதல் போட்டியில் க்ரூப் பியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்தும் ஈரானும் மோதின. இரவு 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் க்ரூப் ஏ-யில் இடம்பெற்றுள்ள செனகலும் நெதர்லாந்தும் மோதுகின்றன.
undefined
இங்கிலாந்து - ஈரான் இடையேயான போட்டி தொடங்கிய 15வது நிமிடத்தில் ஈரான் கோல்கீப்பர் பைரன்வந்த் சக வீரரை மோதியதால் மூக்கில் அடிபட்டு ஸ்ட்ரெட்சரில் தூக்கி செல்லப்பட்டார்.அவருக்கு மாற்று கோல்கீப்பராக ஹுசைனி களத்திற்கு வந்தார்.
ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜூட் பெலிங்காம் முதல் கோலை அடித்தார். 43 நிமிடத்தில் புகாயோ சகாவும், 45வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டர்லிங்கும் தலா ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இங்கிலாந்து அணி 3-0 என முன்னிலை வகித்தது.
போட்டியின் 2ம் பாதியில் 62வது நிமிடத்தில் புகாயோ சாகா மீண்டும் ஒரு கோல் அடித்தார். இங்கிலாந்து அணி 4 கோல் அடித்த நிலையில், ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் ஈரானின் மெஹிடி தரெமி அந்த அணிக்கு முதல் கோல் அடித்து கொடுத்தார். அதன்பின்னர் 71வது நிமிடத்தில் இங்கிலாந்தின் மார்கஸ் ரேஷ்ஃபோர்ட் 5வது கோலை அடிக்க, 90வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு 6வது கோலும் கிடைத்தது. 6-1 என இங்கிலாந்து வெற்றியை நெருங்கிய நிலையில், ஆட்டம் முடியவிருந்த தருணத்தில் ஈரான் அணி 2வது கோலை அடித்தது.
6000 தொழிலாளர்களை காவு வாங்கிய ஃபிஃபா உலக கோப்பை.. கத்தாரில் நடந்த கொடுமை
கடைசியில் 6-2 என்ற கோல்கணக்கில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று வெற்றியுடன் இந்த உலக கோப்பையை தொடங்கியுள்ளது.