ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் கிறிஸ்டியானா ரொனால்டோவை விட அதிகமான ஆட்டநாயகன் விருதுகளை வென்று அர்ஜெண்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவர்கள் மீதும் போர்ச்சுகல் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதை ஏமாற்றாமல் இதுவரை சிறப்பாக ஆடிவருகிறது. முதல் சுற்றில் சிறப்பாக ஆடிய பிரேசில், அர்ஜெண்டினா, போர்ச்சுகல், ஃபிரான்ஸ், ஜப்பான், ஸ்பெய்ன், நெதர்லாந்து, யு.எஸ்.ஏ, ஆஸ்திரேலியா, போலந்து, இங்கிலாந்து, செனகல், குரோஷியா, தென்கொரியா, மொராக்கோ, சுவிட்சர்லாந்து ஆகிய 16 அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றன.
undefined
காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் போட்டியில் யு.எஸ்.ஏ அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது. அடுத்த போட்டியில் அர்ஜெண்டினாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி சார்பில் லியோனல் மெஸ்ஸி மற்றும் ஜூலியன் அல்வரெஸ் ஆகிய இருவரும் கோல் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி ஒரு கோல் அடித்தது. எனவே அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் முதல் கோல் அடித்து அர்ஜெண்டினாவிற்கு வலுசேர்த்து வெற்றிக்கும் காரணமாக திகழ்ந்த லியோனல் மெஸ்ஸி ஆட்டநாயகன் விருதை வென்றார். கால்பந்து உலக கோப்பையில் மெஸ்ஸி வென்ற 8வது ஆட்டநாயகன் விருது. இதன்மூலம், ரொனால்டோவின் சாதனையை முறியடித்துள்ளார்.
FIFA World Cup 2022: காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டி அட்டவணை..!
கிறிஸ்டியானா ரொனால்டோ உலக கோப்பைகளில் 7 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். மெஸ்ஸி 8 முறை ஆட்டநாயகன் விருதை வென்று ரொனால்டோவின் சாதனையை முறியடித்துள்ளார்.