ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஃபைனலில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் ஃபிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் அணிகள் ஃபைனலில் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி 2 கோல் அடித்தது. ஃபிரான்ஸ் அணி முதல் பாதியில் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடிக்க, 36வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் டி மரியா 2வது கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 2-0 என அர்ஜெண்டினா முன்னிலை பெற்றது.
undefined
2ம் பாதி ஆட்டத்தில் 80வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்த ஃபிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே, 81வது நிமிடத்தில் அடுத்த கோல் அடித்தார். ஆட்டத்தின் 117வது நிமிடத்தில் 3வது கோல் அடித்து ஆட்டத்தை டிரா செய்தார் எம்பாப்பே. தொடர்ச்சியாக 3 கோல்கள் அடித்து அசத்தினார். ஃபிஃபா உலக கோப்பை ஃபைனலில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை எம்பாப்பே படைத்தார்.
அவர் ஹாட்ரிக் கோல் அடித்ததால் தான் ஆட்டம் 3-3 என டிரா ஆனது. பெனால்டி ஷூட் அவுட்டிலும் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் கோல் அடிக்காததால் ஃபிரான்ஸ் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அர்ஜெண்டினா உலக கோப்பையை வென்றது.
இந்த உலக கோப்பையில் 9 கோல்கள் அடித்த எம்பாப்பே, அதிக கோல்கள் அடித்த வீரருக்கான கோல்டன் பூட்-டை வென்றார்.