FIFA World Cup 2022: நனவானது மெஸ்ஸியின் வாழ்நாள் கனவு.. ஃபிரான்ஸை வீழ்த்தி உலக கோப்பையை வென்றது அர்ஜெண்டினா

Published : Dec 18, 2022, 11:42 PM ISTUpdated : Dec 19, 2022, 12:19 AM IST
FIFA World Cup 2022: நனவானது மெஸ்ஸியின் வாழ்நாள் கனவு.. ஃபிரான்ஸை வீழ்த்தி உலக கோப்பையை வென்றது அர்ஜெண்டினா

சுருக்கம்

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஃபைனலில் ஃபிரான்ஸை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி உலக கோப்பையை வென்றது.  

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஃபைனல் இன்று நடந்தது. சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸியின் கடைசி உலக கோப்பை இதுவென்பதால் அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையை வென்றுகொடுக்கும் தீவிரத்தில் இந்த உலக கோப்பையில் களமிறங்கினார் மெஸ்ஸி. மெஸ்ஸி தலைமையில் சிறப்பாக ஆடிய அர்ஜெண்டினா அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

ஃபைனலில் அர்ஜெண்டினாவும் நடப்பு சாம்பியன் ஃபிரான்ஸும் மோதின. தொடக்கம் முதலே ஆட்டம் பரபரப்பாக இருந்தது. தொடக்கம் முதலே கோல் அடிக்க மிகத்தீவிரமாக முயற்சித்த அர்ஜெண்டினா அணி முதல் பாதி ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்தன.

FIFA World Cup: ஃபிரான்ஸ் கோல் அடித்த பின் நொடிக்கு 24,400 டுவீட்.. பற்றி எரியும் டுவிட்டர்! எலான் மஸ்க் தகவல்

ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்ஸி கோல் அடிக்க, அடுத்த 13வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.

2ம் பாதி ஆட்டத்தில் ஃபிரான்ஸ் அணி கோலுக்காக கடுமையாக முயற்சித்தது. ஆனால் 2ம் பாதி ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்தில் கோல் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஃபிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே கோல் அடித்து கணக்கை தொடங்கினார். பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்த அடுத்த நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தார் எம்பாப்பே. 2 நிமிடங்களில் எம்பாப்பே 2 கோல்கள் அடிக்க, ஆட்ட முடிவில் 2-2 என டிராவானது.  இதையடுத்து போட்டியின் முடிவை தீர்மானிக்க கூடுதலாக அரைமணி நேரம் வழங்கப்பட்டது.

FIFA World Cup: பரபரப்பான ஃபைனலில் 2 நிமிடத்தில் 2 கோல்கள் அடித்து ஆட்டத்தை புரட்டிப்போட்ட எம்பாப்பே

கூடுதல் நேரத்தில் ஆட்டத்தின் 108வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடிக்க, 117வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் எம்பாப்பே  கோல் அடிக்க ஆட்டம் மீண்டும் 3-3 என டிராவிலேயே முடிந்தது. இதையடுத்து வழங்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜெண்டினா 4 கோல்களும், ஃபிரான்ஸ் 2 கோல்களும் அடிக்க, பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்ற அர்ஜெண்டினா அணி உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

லியோனல் மெஸ்ஸியின் உலக கோப்பை கனவு நனவானது.  

FIFA World Cup Final: 23வது நிமிடத்தில் கோல் அடித்த மெஸ்ஸி.. முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என அர்ஜெண்டினா முன்னிலை

 

PREV
click me!

Recommended Stories

FIFA 2026: நாக்-அவுட்டில் அமெரிக்கா.. முதல் வெற்றியுடன் பிரேசில் மாஸ் கம்பேக்!
Baba Vanga கணிப்பு பலிக்குமா? 2026 FIFA உலகக் கோப்பையை வெல்ல போவது இந்த அணியா?