ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகளை எந்த சேனல் & ஆன்லைனில் பார்க்கலாம்..? முழு ஒளிபரப்பு விவரம்

By karthikeyan V  |  First Published Nov 2, 2022, 9:27 PM IST

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகளை எந்தெந்த சேனல்கள் மற்றும் ஆன்லைனில் பார்க்கலாம் என்ற முழு ஒளிபரப்பு விவரத்தை பார்ப்போம்.
 


ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் வரும் 20ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை கத்தாரில் நடக்கிறது. ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் மத்திய ஆசிய நாட்டில் நடப்பது இதுவே முதல் முறை.32 அணிகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

குரூப் ஏ - கத்தார், ஈகுவடார், செனெகல், நெதர்லாந்து
குரூப் பி - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
குரூப் சி - அர்ஜெண்டினா, சௌதி அரேபியா, போலந்து, மெக்ஸிகோ
குரூப் டி - ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா
குரூப் இ - ஸ்பெயின், கோஸ்டாரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்
குரூப் எஃப் - கனடா, பெல்ஜியம், மொராக்கோ, குரோஷியா
குரூப் ஜி - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேம்ரூன்
குரூப் ஹெச் - போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா

Latest Videos

undefined

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை: எந்தெந்த தேதிகளில் என்னென்ன போட்டிகள்..? முழு போட்டி விவரம்

கத்தாரில் 8 மைதானங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன. நவம்பர் 20 முதல் டிசம்பர் 3 வரை க்ரூப் போட்டிகளும், டிசம்பர் 3 முதல் 6 வரை காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகளும், டிசம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் காலிறுதி போட்டிகளும், டிசம்பர் 14 மற்றும் 15ல் அரையிறுதி போட்டிகளும், டிசம்பர் 17ம் தேதி 3வது இடத்திற்கான போட்டியும் டிசம்பர் 18ம் தேதி இறுதிப்போட்டியும் நடக்கவுள்ளன.

க்ரூப் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30, 6.30 மணிக்கும், இரவு 8.30 மற்றும் 9.30 மணிக்கும் தொடங்கும். காலிறுதிக்கு முந்தைய சுற்று மற்றும் காலிறுதி போட்டிகள் இரவு 8.30 மற்றும் இரவு 10.30 மணிக்கு தொடங்கும். அரையிறுதி போட்டிகள் இரவு 10.30 மணிக்கும், இறுதிப்போட்டி இரவு 8.30 மணிக்கும் தொடங்கும்.

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகளை ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் பார்க்கலாம். Viacom 18 ஆங்கிலம் மற்றும் இந்தி சேனல்களில் பார்க்கலாம். மற்ற பிராந்திய மொழிகளிலும் ஒளிபரப்பப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதித்த தடையை நீக்கியது ஃபிஃபா! U17 மகளிர் உலக கோப்பையை இந்தியாவில் நடத்தலாம்

VOOT, ஜியோ TV, ஜியோ சினிமா ஆகிய ஆன்லைன்களிலும் பார்க்க முடியும்.
 

click me!