ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் ஏற்கனவே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட போர்ச்சுகல் அணி, இன்று தென்கொரியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. நாளை முதல் காலிறுதிக்கு முந்தைய சுற்று (ரவுண்ட் 16) போட்டிகள் தொடங்குகின்றன.
இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கி 2 போட்டிகள் நடந்தன. ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதிக்கு பெற்ற போர்ச்சுகல் அணி தென்கொரியாவை எதிர்கொண்டது.
undefined
BAN vs IND: ரிஷப் பண்ட்டுக்கு இதுவே கடைசி சான்ஸ்..! சொதப்பினால் இந்திய அணியில் இடம் காலி
இந்த போட்டி தொடங்கிய 5வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ரிச்சர்டோ முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் தென்கொரியா வீரர் கிம் யங்-வோன் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமனடைந்தது. 2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. 90 நிமிடங்கள் முடிந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்திலேயே தென்கொரிய வீரர் ஹீ-சன் கோல் அடிக்க, 2-0 என வெற்றி பெற்ற தென்கொரியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. போர்ச்சுகல் அணி தென்கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
போர்ச்சுகல் - தென்கொரியா அணிகள் இடம்பெற்றிருந்த அதே க்ரூப் எச்-ல் இடம்பெற்றிருந்த உருகுவே - கானா அணிகளுக்கு இடையேயான போட்டியில் உருகுவே 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றும் கூட, தென்கொரியா அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றதால் உருகுவே அணி தொடரை விட்டு வெளியேறியது.