ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் செர்பியா - கேம்ரூன் அணிகளுக்கு இடையேயான போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவானது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று க்ரூப் ஜி-யில் இடம்பெற்றுள்ள செர்பியா - கேம்ரூன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.
இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் வேட்கையில் தீவிரமாக ஆடின. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் கேம்ரூன் வீரர் ஜீன் சார்லஸ் காஸ்டெலெட்டோ முதல் கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டம் முடியப்போகும் நேரத்தில் செர்பியா அணியின் பால்கோவிக் மற்றும் மிலின்கோவிக் ஆகிய இருவரும் அடுத்தடுத்து கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் 2-1 என செர்பியா அணி முன்னிலை வகித்தது.
undefined
FIFA World Cup: சர்வதேசத்தை அதிரவைத்த கால்பந்து வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டுகள்
2ம் பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் போட்டியின் 53வது நிமிடத்தில் செர்பியா அணி 3வது கோலையும் அடிக்க, 3-1 என வலுவான முன்னிலையில் இருந்தது செர்பியா.
FIFA World Cup 2022: அபாரமாக ஆடிய குரோஷியா, 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி மாபெரும் வெற்றி
அதன்பின்னர் கோலுக்காக வெறித்தனமாக ஆடிய கேம்ரூன் அணி ஆட்டத்தின் 63 மற்றும் 66வது நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோல் அடிக்க, ஆட்டம் 3-3 என சமனடைந்தது. அதன்பின்னர் இரு அணிகளும் வின்னிங் கோல் அடிக்க தீவிரமாக முயன்றும் அது முடியவில்லை. கடைசியில் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.