ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் தென்கொரியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கானா அணி வெற்றி பெற்றது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் கனடாவை வீழ்த்தி குரோஷியா அணி வெற்றி பெற்றது.
அதற்கடுத்த நடந்த போட்டியில் க்ரூப் எச்-ல் இடம்பெற்றுள்ள கானா மற்றும் தென்கொரியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளுமே சிறப்பாக ஆடின. முதல் போட்டியில் தோற்றிருந்ததால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கின.
undefined
விளையாட்டு வீரர்களுக்கு வயது வெறும் எண்களாகிவிட்டது..! முன்மாதிரி ரொனால்டோ.. எப்படி சாத்தியமானது..?
ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் கானா வீரர் முகமது சலிசு முதல் கோல் அடித்தார். அவரை தொடர்ந்து ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் கானா வீரர் முகமது குடுஸ் அடுத்த கோல் அடிக்க, ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 2-0 என கானா முன்னிலை வகித்தது.
2வது பாதியில் ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் தென்கொரிய வீரர் சோ கு-சங் முதல் கோல் அடித்து கொடுத்தார். அடுத்த 3 நிமிடத்தில் கு-சங் 2வது கோலையும் அடித்தார். இதையடுத்து ஆட்டம் 2-2 என சமனில் இருந்த நிலையில், ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் கானா வீரர் குடுஸ் மீண்டுமொரு கோல் அடிக்க, 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற கானா அணி, அதன்பின்னர் தென்கொரிய அணி கோல் அடிக்காததால் 3-2 என ஜெயித்து புள்ளி பட்டியலில் எச் பிரிவில் 2ம் இடத்திற்கு முன்னேறியது.