FIFA World Cup 2022: ஃபிரான்ஸ் - போலந்து நாக் அவுட் போட்டி முடிவு..! மிக துல்லியமாக கணித்த ஃபிரான்ஸ் அதிபர்

By karthikeyan VFirst Published Dec 5, 2022, 3:26 PM IST
Highlights

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் ஃபிரான்ஸ் - போலந்து இடையேயான போட்டியில் எந்தெந்த வீரர்கள் கோல் அடிப்பார்கள்? எந்த அணி வெல்லும் என்பதை ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் துல்லியமாக கணித்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்று அர்ஜெண்டினா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஃபிரான்ஸ் ஆகிய 4 அணிகளும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இன்னும் 4 போட்டிகள் எஞ்சியிருக்கின்றன. அந்த 4 போட்டிகளிலிருந்து 4 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதியில் அர்ஜெண்டினா - நெதர்லாந்து அணிகளும், இங்கிலாந்து - ஃபிரான்ஸ் அணிகளும் மோதுகின்றன.

FIFA World Cup 2022: செனகலை அசால்ட்டா ஊதித்தள்ளிய இங்கிலாந்து காலிறுதிக்கு தகுதி

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் - குரோஷியா,  பிரேசில் - தென்கொரியா, மொராக்கோ - ஸ்பெய்ன், போர்ச்சுகல் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதும் 4 போட்டிகளில் வெற்றி பெறும் 4 அணிகளும் காலிறுதி சுற்றில் மோதும்.

நேற்று நடந்த காலிறுதிக்கு முன்னேறும் நாக் அவுட் போட்டியில் ஃபிரான்ஸும் போலந்தும் மோதின. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஃபிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஃபிரான்ஸ் அணியில் ஆலிவியர் ஒரு கோலும், கிலியன் எம்பாப்பே 2 கோல்களும் அடித்தனர். போலந்து அணியில் ராபர்ட் லிவாண்டௌஸ்கி ஒரு கோல் அடித்தார். கடைசியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஃபிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் யார் யார் கோல் அடிப்பார்கள், எந்த அணி எப்படி வெல்லும் என்பதை ஃபிரான்ஸ் அதிபர் ஒரு நாளைக்கு முன்பாகவே மிக துல்லியமாக கணித்தது கால்பந்து உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை(டிசம்பர் 4) நடந்தது. ஆனால் இந்த போட்டி குறித்து கருத்து கூறிய ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், போலந்து அணியில் ராபர்ட் லிவாண்டௌஸ்கி மட்டும் ஒரு கோல் அடிப்பார். ஃபிரான்ஸ் அணியில் எம்பாப்பே மற்றும் ஆலிவியர் கோல் அடிப்பார்கள். ஃபிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறும் என மிகத்துல்லியமாக கணித்திருந்தார் மேக்ரான்.

FIFA World Cup 2022: கால்பந்து உலக கோப்பையில் ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார் லியோனல் மெஸ்ஸி

அதேபோலவே அந்த போட்டியில் அவர் கூறிய வீரர்கள் மட்டுமே கோல் அடித்தனர். அவர் கூறியதை போலவே 3-1 என்ற கோல் கணக்கில் ஃபிரான்ஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
 

click me!