FIFA World Cup 2022: செனகலை அசால்ட்டா ஊதித்தள்ளிய இங்கிலாந்து காலிறுதிக்கு தகுதி

By karthikeyan V  |  First Published Dec 5, 2022, 10:48 AM IST

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செனகலை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி காலிறுதிக்கு தகுதிபெற்றது.
 


22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லீக் சுற்று முடிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன.

முதல் சுற்றில் சிறப்பாக ஆடிய பிரேசில், அர்ஜெண்டினா, போர்ச்சுகல், ஃபிரான்ஸ், ஜப்பான், ஸ்பெய்ன், நெதர்லாந்து, யு.எஸ்.ஏ, ஆஸ்திரேலியா, போலந்து, இங்கிலாந்து, செனகல், குரோஷியா, தென்கொரியா, மொராக்கோ, சுவிட்சர்லாந்து ஆகிய 16 அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றன. 

Latest Videos

undefined

FIFA World Cup 2022: 2 கோல் அடித்தார் எம்பாப்பே.. போலந்தை வீழ்த்தி ஃபிரான்ஸ் காலிறுதிக்கு தகுதி

காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் போட்டியில் யு.எஸ்.ஏ அணியை வீழ்த்தி நெதர்லாந்தும், அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அர்ஜெண்டினாவும் காலிறுதிக்கு முன்னேறின. 3வது போட்டியில் போலந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றின் 4வது போட்டியில் இங்கிலாந்து - செனகல் அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோர்டான் ஹெண்டர்சன் 38வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். ஹாரி கேன் முதல் பாதியில் நீட்டிக்கப்பட்ட ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் (45+3) 2வது கோல் அடித்தார். 

FIFA World Cup 2022: கால்பந்து உலக கோப்பையில் ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார் லியோனல் மெஸ்ஸி

இங்கிலாந்து வீரர் புகாயோ சாகா 57வது நிமிடத்தில் 3வது கோல் அடித்தார். இங்கிலாந்து அணி 3 கோல்கள் அடிக்க, கடுமையாக போராடியும் செனகல் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதையடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி காலிறுதிக்கு தகுதிபெற்றது. செனகல் அணி தொடரை விட்டு வெளியேறியது.
 

click me!