FIFA World Cup 2022: 2 கோல் அடித்தார் எம்பாப்பே.. போலந்தை வீழ்த்தி ஃபிரான்ஸ் காலிறுதிக்கு தகுதி

Published : Dec 04, 2022, 10:45 PM IST
FIFA World Cup 2022: 2 கோல் அடித்தார் எம்பாப்பே.. போலந்தை வீழ்த்தி ஃபிரான்ஸ் காலிறுதிக்கு தகுதி

சுருக்கம்

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஃபிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியது.  

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லீக் சுற்று முடிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன.

முதல் சுற்றில் சிறப்பாக ஆடிய பிரேசில், அர்ஜெண்டினா, போர்ச்சுகல், ஃபிரான்ஸ், ஜப்பான், ஸ்பெய்ன், நெதர்லாந்து, யு.எஸ்.ஏ, ஆஸ்திரேலியா, போலந்து, இங்கிலாந்து, செனகல், குரோஷியா, தென்கொரியா, மொராக்கோ, சுவிட்சர்லாந்து ஆகிய 16 அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றன. 

FIFA World Cup 2022: கால்பந்து உலக கோப்பையில் ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார் லியோனல் மெஸ்ஸி

காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் போட்டியில் யு.எஸ்.ஏ அணியை வீழ்த்தி நெதர்லாந்தும், அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அர்ஜெண்டினாவும் காலிறுதிக்கு முன்னேறின.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் ஃபிரான்ஸும் போலந்தும் மோதின. இந்த போட்டியில் 44வது நிமிடத்தில் ஃபிரான்ஸ் வீரர் ஆலிவியர் முதல் கோல் அடித்தார். அதன்பின்னர் ஆட்டத்தின் 2ம் பாதியில் ஃபிரான்ஸின் நட்சத்திர இளம் வீரர் கிலியன் எம்பாப்பே 2 கோல்களை அடிக்க, ஆட்டம் முடியும் தருவாயில் போலந்து அணி ஒரு கோல் அடித்தது.

FIFA World Cup 2022: காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டி அட்டவணை..!

எனவே 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் ஃபிரான்ஸ் அணி, காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

FIFA 2026: நாக்-அவுட்டில் அமெரிக்கா.. முதல் வெற்றியுடன் பிரேசில் மாஸ் கம்பேக்!
Baba Vanga கணிப்பு பலிக்குமா? 2026 FIFA உலகக் கோப்பையை வெல்ல போவது இந்த அணியா?